பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2504 திருக்குறட் குமரேச வெண்பா யாது; அது முடியாமல் போகவே படியார் பழிக்க நேர் வர்: பொருள் அழிவோடு பழியும் அவமானமும் படியும் ஆதலால் தெளியாத காரியம் பழியாம் என விழிதெரிய விளக்கினர். ஆஅம் எனக்கெளிது என்றுலகம் ஆண்டவன் மே எந் துனே யறியான் மிக்குநீர் பெய்திழந்தான்; தோஒம் உடைய தொடங்குவார்க் கில்லேயே தாஅம் தரவாரா நோய். (பழமொழி 7) நிலைமையை உணராமல் மா வலி மன்னன் வினே செய்து விளிவடைந்ததை இது விளக்கியுள்ளது. தோம் உடைய தொடங்குவார் துயரம் அடைவார் என்று குறித் திருக்கிறது. தோம்= குற்றம். ஏதப்பாடு அஞ்சு பவர் தெளிவி லதனத் தொடங்கார் என்னும் இதனே எதிர் நோக்கி வந்துள்ளது. உண்மையை ஒர்ந்து கொள்ள வேண்டும். ஆய்ந்து வினை செய்வதே அறிவாம். தேர்ந்து தெளியாததை மேலோர் செய்யார். இது குலோத்துங்க பாண்டியன் பால் தெரிய வங்தது. ச ரி த ம் . மதுரையம்பதியிலிருந்து அரசு புரிந்து வந்த இந்த மன்னன் அதிசய மதிமான். கலைகள் பல ப யி ன் று தெளிந்தவன். சிறந்த நீதிமான்: நெறிநியமங்களுடைய வன். அழகினல் மதனே வென்ற ஆடவர் திலகன் என்று உலகம் புகழ்ந்துவர உருவ எழிலிலும் அறிவுகிலேயிலும் இவன் ஒளி மிகுந்து நின்றன். எவ்வழியும் மாட்சியுடன் இவன் ஆட்சி புரிந்து வருங்கால் மறையவன் ஒருவன் தனது மனைவியுடன் மதுரையை நோக்கிவந்தான். இடை வழியில் ஒர் ஆலமர நிழலில் தங்கின்ை. தாகத்துக்குத் தண்ணிர் கொண்டுவர அயலே போன்ை. அதுபொழுது காற்று அடித்தது: மேலே தொங்கியிருந்த அம்பு ஒன்று இழே படுத்திருந்த பார்ப்பனி வயிற்றில் பாய்ந்தது. அவள் மாய்ந்தாள். பார்ப்பான் வந்தான்; மனேவி மாண் டதைக் கண்டு மறுகி அழுதான். இயல்பாய் அங்கே வில்லும் கையுமாய் நின்ற ஒரு வேடனேக் கண்டான்.