பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2506 திருக்குறட் குமரேச வெண்பா ஏதப்பாடு அஞ்சுபவர் தெளிவிலத&னத் தொடங்கார் என்பதை உலகம் இவன்பர்ல் உணர்ந்து கின்றது. தெளியாத காரியத்தைச் செய்யற்க; செய்யின் இளிவே அதல்ை எழும். எதையும் தெளிந்து தொடங்கு. 465. வாலி திறம் எண்ணுமல் வந்தேனுே துந்துபிதன் கோலம் இழந்தான் குமரேசா-சால வகையறச் சூழா தெழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதோ ராறு. (டு) இ-ள் குமரேசா! வாலியின் வலி கிலேயை உணராமல் வந்து மூண்டு பொருது ஏன் துங்துபி கொங்து மாண்டான்? எனின், வகை அறச் சூழாது எழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பது ஒர் ஆறு என்க. இது, தேராமல் செய்வது தீது என்கின்றது. செய்யும் திறங்களே முழுவதும் ஆராய்ந்து தெனி யாமல் அரசன் போருக்கு எழுவது எதிரிகளே வலி பெறப் புரியும் ஒரு வழியாம். வகை = தரம், திறம்: இனம்; உபாயம். ஒரு காரியத்தைச் செய்யநேர்ந்தபொழுது அதற்கு உரிய துறைகளையும் முறைகளேயும் உபாயங்களையும் குறைவற நன்கு தேர்ந்து தெளிந்துகொள்ள வேண்டும்: அவ்வாறு தெளிந்து சென்ருல் கருதிய கருமம் இனிது கிறைவேறிப் பெருமையும் இன்பமும் பெருகி வரும்: தெளியாது போனல் காரியம் கெடுவதோடு இழிவும் நேரும். பிழை நேராமல் பேணி ஒழுகுக. மேல், தெளிவில்லாத வினையைத் தொடங்காதே என்ருர்: தொடங்கில்ை அரசுக்கு நேரே அழிதுயர்கள் விளேயும் என இதில் அறிவுறுத்தி யுள்ளார்.