பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2408 திருக்குறட் குமரேச வெண்பா நட்டாரை வேண்டின நறுoமன் கதுப்பினுய! விட்டாரை யல்லால் கொளல் வேண்டா-விட்டார் பொறிகணங்கு மென்முலேப் பொன்னன்னுய்! உய்ப்பர் மறிதர வில்லாக் கதி. (அறநெறி 46) தமராகத் தழுவிக் கொள்ளவுரிய பெரியாரை முனைப் பாடியார் இப்படிக் குறித்துக் காட்டியிருக்கிரு.ர். இரும்பின் இரும்பிடை போழ்ப; பெருஞ்சிறப்பின் நீருண்டார் நீரான்வாய் பூசுப;-தேரின் அரிய அரியவற்ருல் கொள்ப; பெரிய பெரியாரான் எய்தப் படும். (நான்மணி, 36) பெரிய பேறுகள் பெரியாராலேயே பெறப் பெறு கின்றன: ஆகவே அவரை உரிமையோடு ேப னி க் கொண்டு பெரியராய் உயர்ந்து கொள்ளுங்கள் என்று விளம்பிநாகனர் இங் வனம் விளம்பி யுள்ளார். இறப்ப நினையுங்கால் இன்னுது எனினும் பிறப்பினே யாரும் முனியார்-பிறப்பினுள் பண்பாற்றும் நெஞ்சத் தவர்களோ டெஞ்ஞான்றும் நண்பாற்றி நட்கப் பெறின். (நாலடி 174) இறப்பு துன்பம் மிக வுடையது; முனிவரால் முனி யத்தக்கது. ஆயினும் பண்புடைய பெரியோர்களின் நண்பு அமையப்பெறின் துன்பமான பிறப்பும் இன்ப மாம் என்று இது குறித்துள்ளது. இதில் அமைந்துள்ள பொருள் நயங்களேக் கூர்ந்து ஒர்ந்து கொள்ளுக. அரிய பெரிய செல்வங்களேயெல்லாம் இயல்பாக எய்தியுள்ள அரசன் பெரியாரைத் துனே யாகப் பெற வில்லையாயின் பெரிய குறையே. அருமையுடையதைப் பெற்றவர் பெருமை அடைகின் ருர். பெரியாரைத் தமராகப் பேணிக் கொண்டவனுக்கு எல்லா இன்பப் பேறுகளும் எளிதே உளவாம். இது தக்கன் பால் அறிய வந்தது. ச ரி த ம். இவன் கருநட தேசத்து வேந்தன் மகன். சாந்த சிலங்கள் நிறைந்தவன். தெளிந்த மெய்யுணர்வு இள