பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. தெரிந்து செயல் வகை 2509 கோன் வஞ்சமாய்க் கூறிவிடவே இவன் சீறி எழுந்து நேரே கிட்கிந்தைக்கு வந்தான். வானர ேவ ங் த னே வலிந்து போருக்கு அழைத்தான். மதிகேடய்ை வந்து வாதாடுகின்ற இவனேக் கண்டதும் அந்த அதிசய வீரன் ஆர்த்தெழுந்தான். அடலமர் மூண்டது. உக்கிர வீர பராக்கிரமங்களோடு இருவரும் ஒருவரை ஒருவர் வெல்ல வேண்டும்என்று ஊக்கிப் போராடினர். முடிவில் இவனே அவன் கொன்று தொலேத்து வென்றி வீருேடு விளங்கி கின்றன். வினே மூண்டு வந்த இவன் மாண்டு மடிங் தான். பலசாலிகளான அசுரர்கள் மீண்டு திரண்டு வரி னும் வருவர் என்று எதிர்நோக்கி வாலி தனது வலிமை களே வளப்படுத்திக் கிளர்ச்சியோடு வளர்ச்சியுற்றிருங் தான். வகையறச் சூழாத போருக்கு எழுவது பகை வரை நேரே பலப் படுத்துகின்ற ஒரு வழியாம் என்ப தைத் தெளிவாக இவன் உணர்த்தி கின்ருன். o ■ வழிவகை தேரான் வலிந்துபோர் கேரின் அழிவே அடைவன் அவன். ஆய்ந்து தெளியான் மாய்ந்து விழுவான். 468. நின்றுசெய்து கெட்டான் நிருகன் சமதங்கி குன்றினர் செய் யாதேன் குமரேசா-துன்றியே செய்தக்க வல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும். (சு) இ-ள். குமரேசா! கிருகன் செய்து கெட்டான். சமதக்கினி ஏன் செய்யாமல் கெட்டார்? எனின், செய்தக்க அல்ல செயக் கெடும்; செப்தக்க செய்யாமை யானும் கெடும் 石T石了占。 தமது கிலேமைக்குத் தகாத செயல்களேச் செய்தா லும், தக்க வினேகளைச் செய்யாது விட்டாலும் அவர் கெடுவர். செயல் வகைகள் இவ்வாறு தெரிய வந்துள்ளன.