பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 10 திருக்குறட் குமரேச வெண்பா தெரிந்து செய்வது, தெரியாமல் செய்வது, தேருமல் செய்வது, மாறுபாடாய்ச் செய்வது. வேறுபடச் செய் வது, மயலாய்ச் செய்வது, மருண்டு செய்வது என இன் னவாறு கருமங்கள் மருமங்களாய் மருவியிருக்கின்றன. செய்தக்க=செய்தற்குத் தகுதியான காரியங்களே. செய்தக்க அல்ல=செய்யத்தக்கன அல்லாதவற்றை. தன் தகுதிக்குத் தகாத செயல்களே ஒருவன் செய்ய நேர்ந்தால் அதல்ை அல்லலும் பழியும் நேரும்; அவ்: வாறு அழிவும் இழிவும் தருகிற கருமங்களேச் செய்ய லாகாது என்பதைக் குறிப்பாக இது தெளிவுறுத்தி யுள்ளது. தெளிவின்றி எதையும் செய்ய லாகாது. கெடும் கெடும் என இரண்டிடங்களிலும் வந்துள்ள பயனிலைகளுக்கு உரிய எழுவாய்களே வ ரு வி த் து ப் பூர்த்தி செய்து கொள்ளுக. இந்தச் செயல் வகைகள் எல்லாருக்கும் பொதுவாயினும் புவி ஆளும் வேந்தர்க் குச் சிறப்புரிமைகளாய் நின்றன. கேடு நேராமல் சீருடன் நாடி வினேசெய்பவனே நல்ல அரசன் ஆகிருன். தகாததைச் செய்தவனும் கெடுவான்: தக்கதைச் செய்யாதவனும் கெடுவான் எனத் தனித்தனியே அறிய வந்தனர். * கெடும் என்பது செய்யும் என்னும் வினேமுற்று ஆதலால் படர்க்கை ஆண்பாலில் படிந்து கின்றது அ.:றி&ண வாப்பாடு அவச்செயல்களின் அவலம் தெரிய வந்தது. தெளிவான செயலே ஒளி புரிகின்றது. கேடு அடைய யாரும் விரும்பார்; தமக்கு அது வந்துவிடலாகாது என்றே யாண்டும் அஞ்சுவர்; அந்த வேண்டாத கேடு வினைகளின் வழியே மூண்டு வருவதை ஈண்டு விழி தெரிய விளக்கி யருளினர். நல்ல கருமங்களேக் கருத்தோடு ஊன்றி யுணர்ந்து எவ்வழியும் திருத்தமாகச் செய்து வருபவன் ஆக்கமும் பு க ழு ம் அடைந்து கொள்ளுகிருன். தகுதியில்லாத