பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. தெரிந்து செயல் வகை 25 || || பொல்லாத வினைகளைச் செய்ய நேர்ந்தவுன் கேடும் பழி யும் படிந்து யாண்டும் அல்லலுழந்து தாழ்கின்றன். தக்கவர்களைப் பக்கம் வைத்துக் கொண்டு என்றும் தகுதியான நெறிமுறைகளேயே செய்யவுரிய வேந்தன் தகாதன செய்யநேரின் அது வெய்ய துயரமாய் மூண்டு அவனே நைய வருத்தும். தக்க அல்லன செய்பவரையும் தகுதியானவற்றைச் செய்யாதவரையும் தக்கபடி நாடித் தண்டிக்கவுரியவன் அரசன். அத்தகைய தலைமையுடைய அவன் தகவின்றித் தவறு செய்யின் மிக்க தெய்வ தண்டனையை அவனுக்கு அது விளேத்து விடுகின்றது. தண்டிக்கப் படுவோர் தம்மைத் தண்டியாது ஒழித்து விட்டுத் தண்டிக்கப் படாதோர் தம்மைத் தண்டிக்கும் தரணி மன்னன், எண்டிக்கும் பரந்து மூடும் இரும்பழி எய்தித் தியோர்த் தண்டிக்கும் தரும ேைல தண்டிக்கப் படும்பின் என்ருன். (உத்தரகாண்டம் 13-3) செய்யவுரியதைச் செய்யாதுவிட்டுச் செய்யத்தகாத தைச் செய்யும் அரசன் இருமையும் கெட்டு எமவேதனே களே அடைவான் என இது குறித்துள்ளது. பகைய லாதவ ரைப்பகை யாக்கலும், நகையில் தீமனத் தாரை நண் பென்னலும், முகையின் வேய்ந்தமென் மொய்ம்மலர்க் கண்ணியாய்! மிகையின் மற்றவை பின்னே வெதுப்புமே. (சூளாமணி) பெரிய முயற்சி, வினைபயனைப் பேணு வினேயே, பயன்சிறிதாம் அரிய வினையே, பின்துயரம் ஆக்கும் வினேயே, புரிந்தாலும்: பெரிய முயற்சி முதலாகப் பேசும் வினைக்கு மறுதலையாம் உரிய வினையை விடுத்தாலும் உலவாப் பெருமை ஒழியுமே. (விநாயக புராணம்}