பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 12 திருக்குறட் குமரேச வெண்பா தகாதவற்றைச் செய்தாலும் தக்கதைச் செய்யாது. விட்டாலும் அரசன் கெட்டான் என்னும் இவை ஈண்டு உய்த்து உணர வுரியன. நெடிது பற்பகல் செல்லினும் நிரப்புவது ஒன்றை இடைவிடர்மலே முயன்று பெற்றிடுகின்றது இயற்கை; உடல்வருந்தியும் தங்களால் முடிவுருது ஒன்றை முடியும் ஈதெனக் கொள்வது கயவர்தம் முறையே. (கந்த புராணம்) முடிவதை முயன்று செய்! முடியாததை மூடமாய் மூண்டு செய்யாதே என இது குறித்துள்ளது. செய்யும் செயல்கள் வழுவின் வெய்ய துயர்களும் வீண் பழிகளும் விளங்து நாளும் வருத்தும். இவ்வுண்மைகள் நிருகனிடமும், சமதக்கினி பாலும் முறையே தெரிய வங்தன. ச ரி த ம் . நிருகன் என்பவன் மராட தேசத்து வேந்தன். அதிசய மான செல்வ வளங்களுடையவன். யானே கு தி ைர முதலிய நால்வகைச் சேனைகளும் இ வ னி ட ம் நன்கு அமைந்திருந்தன. தான் பிறந்தநாளேச் சிறந்த தெய்வத் திருநாளாக ஆண்டுதோறும் இவன் கொண்டாடி வங் தான். அந்த நாளில் பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு. உண்டிகளும் உடைகளும் வழங்கி ஆயிரக் கணக்கான பசுக்களே வேதியர்களுக்குத் தானம் கொடுப்பது வழக் கமாயிருந்தது. ஒரு மறையவன் வாங்கிப் போன பசு ஒன்று மீண்டு வந்து இவனுடைய பசுநிரையில் புகுந்து கொண்டது. அதனை மறுபடியும் ஒரு வேதியனுக்கு இவன் கொடுத்து விட்டான். முன்னம் கொண்டவன் அந்த ஆவைக் கண்டு தன்னுடையது என்று வாதாடி ன்ை. இருவரும் இம் மன்னனிடம் வந்துமுறையிட்டனர். இவன் யாதும் கவனியாமல் அவரை அவமதித்திருக் தான். அவர் உள்ளம் வெறுத்துச் சபித்துப் போர்ை. அதல்ை இவன் அல்லல்அடைந்து என்றும் வருந்தின்ை.