பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. தெரிந்து செயல் வகை 25 13. கொற்றவன் நிருகன் கோடிகோடியாய்க் கொடுக்குங்காலே நற்றவ மறையோ னுக்கு நல்லதோர் பசுவை நல்க மற்றது தப்பி மன்னன் மாநிரை வந்து கூட உற்றதை அறியான் மற்றேர் உயர்மறையோனுக்கு ஈந்தான். முன்பது தானம் பெற்ற முப்புரி நூலன் கேட்டுத் தன்பசுத் தன்னேக் காணுன் தர னியில் எங்கும் தேடிப் பின்பது தானம் பெற்ற பெருந்தவன் மனேயில் கண்டு ஈது என்பசு என்ன லோடும் இருவரும் விவாதம் பண்ணி. (2) மன்னவன் கோயில் தன்னில் மறையவர் விரைந்து வந்து பன்னெடுங்காலம் நின்று முறையிட்டுப் பார்த்து வேந்தன் என்ன கா ரனம் நீர் வந்து முறையிட் டது? என் னக் கேளா அன்னவன் தன்னைக் கோம்பி யாகெனச் சபித்தா ரன்றே. (உத்தரகாண்டம்) நிகழ்ந்துள்ள நிகழ்ச்சிகளே இதில் அறிந்து கொள் கிருேம், பெரிய அரசன யிருந்தும் உரியதை ஒர்ந்து உணராமல் தகவு அல்லாததைச் சிறிது செய்தமையால் மிகவும் கேடு அடைய நேர்ந்தான். சம த க் கி னி. இவர் சிறந்த தவஒழுக்கங்கள் நிறைந்தவர். ஆருயிர் கள் பால் போருளுடையவர். பெற்ருேர்களுக்குச் சிரத் தையுடன் செய்யவுரிய சிரார்த்ததினம் வந்தது; அதற்கு உரிய உபகரணங்களுடன் பசுவின் பாலேயும் ஒரு பாத் திரத்தில் வார்த்து அயலே வைத்திருந்தார். ஒரு காக்கை வந்து அந்தப் பாலேக் குடிக்க நேர்ந்தது. அதுவும் ஒரு சிவன் தானே பருகிப் போகட்டும் என்று பாதும் செய் யாமல் இவர் அமைதியாயிருந்தார். பிதிர்த்தேவதைகள் கொதித்தெழுந்தார்: "புனிதமாய் எங்களுக்குச் செய்ய வுரிய பூசையைச் சரியாகச் செய்யாமல் பிழை புரிந்து விட்டாய். ஆதலால் நீ கீரியா யிழிந்து அலைந்து தேறி வருக’ என்று சபித்துப் போர்ை. அந்தச் சாபத்தின் படியே இவர் ஆபத்தை யடைந்தார். செய்யத் தகாத செயலேச் செய்தாலும் கேடு செய்யத்தக்கதைச் செய் யாது விட்டாலும் கேடு என்பதை அந்த மன்னனும் இந்த முனிவரும் முறையே நன்கு விளக்கி நின்ருர். 315