பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 14 திருக்குறட் குமரேச வெண்பா பறவை புகுந் துண்ணுவதைப் பார்த்திருந்தும் விலக்காமல் பரம ஞான நிறைவுடைய முனிவருமே நிலைகுலேந்து நேர் கெட்டார்; நெறியே நோக்கி அறமுறையின் நிலேதெரிதல், அருள்புரிதல், ஆவன முன் ஆய்ந்து செய்தல், திறமுடைய இவற்றிடையே சிறிதுவழு வுறவரினும் தீங்கே யம்மா! இதனை ஈங்கு ஊன்றி யுணர்ந்து உரிய உண்மைகனே துண்மையாய் ஒர்ந்து தேர்ந்து கொள்ள வேண்டும். தக்கதையே செய்க, தகாததைச் செய்யற்க: ஒக்க இவற்றை யுனர். உரியதை உவந்து செய். -167. நின்ருன் சிரகாரி நேர்ந்துதுந்து மாதெண்னர் குன்றிஞர் என்னே குமரேசா-என்றுமே எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்ப திழுக்கு. (எ) இ-ள் குமரேசா! சிரகாரி எண்ணி கி ன் ரு ன்: துக்தும் மாதினியும் ஏன் எண்ணுமல் இழிந்தார்? எனின், கருமம் எண்ணித் துணிக துணிந்தபின் எண்ணுவம் என்பக இழுக்கு என்க. இது, கருதி முயலுக என்கின்றது. செய்ய வுரிய கருமத்தை முன்னதாக கன்கு ஆய்ந்து இறங்குக: மூண்டு இறங்கியபின் எண்ணு: வோம் என்பது இழுக்கான குற்றமாம். இழுக்கு=பிழை. இழிவு தருவது இழுக்கு என வந்தது. தப்பு நேராமல் செப்பமாச் செய்க. மனிதனுடைய வாழ்வுக்கு உறுதியாய் உதவிபுரிந்து வருவது கருமம்; அதைச் செவ்வையாகச் செய்துவரின் ப்ொருளும் புகழும் இன்பமும் உளவாம்; செயலில்