பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. தெரிந்து செயல் வகை 2521 தானும் இழிந்து படுவான் என இது வரைந்து காட்டி யுளது. கருதிச் செய்யாத காரியம் கடையாகின்றது. பொத்துப் படும் என்று இங்கே உரைத்துள்ளார். பொய்படும் என்று அங்கே குறித்துள்ளார். வினேசெயல் வகையை நன்கு தெரிந்து முடிப்பவன் மேதை அங்ங். னம் தெரியாமல் கெடுப்பவன் பேதை என்பது தெரிய வந்தது. புத்தி அற்றவன் பொத்தன் ஆகிருன். பொத்து= பழுது: பிழை: புரை: குற்றம். பொத்து இல் நண்பு. (புறம் 212) பொத்த வரை. (புறம் 240) பொத்து இன்று. (பெருங்கதை 1-34) இவற்றுள் பொத்து உணர்த்தி நிற்றல் அறிக. பொங்து என மெல்லினம் மேவியும், பொத்தல் என அல் விகுதி பெற்றும் இதன் இனமாய் வருவன ஈங்கு எண்ணி உணர வுரியன. உன் கருமம் ஒட்டையாய் ஒழியாமல் உய்த்துணர்ந்து செய்க. செய்யுங் துறையில் முறை தவறில்ை வெய்ய துயரமாய் எவ்வழியும் வேதனைகளே விளேத்து விடும். சிறையில் கரும்பினைக் காத்தோம்பல் இன்ன; உறைசேர் பழங்கூரை சேர்ந்தொழுகல் இன்ன; முறையின்றிஆளும் அரசின்னு; இன்ை மறையின்றிச் செய்யும் வினே. (இன்னுநாற்பது, 6) வேலியிழந்த பயிர், கூரை சிதைந்த மனே, நீதியில் லாத அரசு, முறையோடு சூழ்ந்து செய்யாத கருமம் பெரிய துன்பமாம் எனக் கபிலர் இவ்வாறு கூறியுள்ளார். மனிதனுடைய உயர்ச்சிகளுக்கெல்லாம் மூலகாரண மாயிருப்பது முயற்சியே. அ. த் த ைக ய வினையை ஆற்றின் ஆய்ந்து ஆற்றுவதே ஆன்ற அறிவுடைமை யாம். கரும வீரம் என்னும் அரிய மேன்மை அதனே ஆற்றும் மருமங்களில் உரிமையாய் மருவி யுளது. முறைதவறி முயன்றவன் இறுதி யுறுவான். 316