பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. தெரிந்து செயல் வகை 2529 உலகு என்றது உலகில் வாழ்ந்து வருகிற மாந்தரை. பொதுமக்களேப் பொதுவாக இங்ங்னம் குறித்து நிற்பி னும் சிறப்பாக உயர்ந்த மேலோரையே இது உரிமை யோடு உணர்த்தி வருகிறது. உயர்வு த ழ் வு க &ள ஊன்றி யுணர்ந்து முறையே புகழ்ந்து கொள்ளவும். இகழ்ந்து தள்ளவும் உரியவர்கள் பெரியோர்களே. தம் என்றது இங்கே தலைமையான அரசர் கிலேமையை. தமது தகுதிக்குப் பொருத்தமான காரியங்களே அவர் செய்துவரின் உயர்ந்தோர் அவரை உவந்துகொள் ளுவர். அவ்வாறு செய்யாமல் பிழை புரி ய நேரின் பேணிக்கொள்ளார். மதிநலமுடைய முதியோர் மதித்து மகிழும்படி மன்னர் விதிமுறையே ஒழுகிவர வேண்டும் என்பது ஈண்டு உணர வந்தது. உலகம் எள்ளாத வகையில் கருமங்களேக் கருதிச் செய்தல் எல்லாருக்கும் வேண்டுமாயினும் ஈ ண் டு அரசர்க்குச் சிறப்பாக வேண்டி நின்றது. தம்முடைய இடம் பொருள் ஏவல் முதலியவற்றின் வன்மை மென்மைகளே ஒர்ந்துணர்ந்து அவற்றிற்குத் தக்கவாறு வேற்று வேந்தரோடும் மாற்ரு.ரிடமும் ஏற்ற முற ஆற்றிவரின் அரசுக்கு மாட்சிமைகள் மருவி வரும். வலியா ரான காலத்து வழங்க லாதி மூன்றினேயும் மெலியா ரிடத்துச் செய்திடலும், மெலியாரான காலத்து வலியார் இடத்தின் ஒறுத்தலேயும், வகுக்கின் வேந்தர்க்கு அவைமைந்தா! நலிவாம்; அதல்ை அவரவர்பால் நடத்து முறைதேர்ந்து இயற்றிடுக. (விநாயக புராணம்) தனக்கு அமைந்துள்ள கிலேமைகளே உ ண ர் ந் து அவற்றிற்குத் தக்கவாறு அயலாரிடம் அரசன் நடந்து கொள்ள வேண்டும் என்று இளவரசனை தன் மகனுக்கு ஒரு வேந்தன் இவ்வாறு உணர்த்தி யிருக்கிருன். 317