பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. வ லி ய றி த ல் 2537 இவற்றுள் ஒல்வது உணர்த்தி நிற்பதை உணர் கின்ருேம். இயல்வதை எண்ணி முயல்வதே உயர்வாம். ஒல்வதை அறிந்து, அறிவதை அறிந்து என்று தனித் தனி அறிக. தன் தகுதிக்கு ஏற்பத் தான் செய்யவுரிய காரியத்தை முதலில் ஒருவன் ஒர்ந்து உணர்ந்துகொள்ள வேண்டும்; அதன் பின்பு அதனைச் செய்து முடிக்கும் துறைகளையும் முறைகளேயும் தேர்ந்து தெளிய வேண் டும்; இவ்வாறு ஒர்ந்து உணர்ந்து தேர்ந்து தெளிந்து கொண்ட பின் கருதிய கருமத்தில் உ று தி பூ ண் டு உள்ளம் துணிந்து ஊக்கிச் செல்ல வேண்டும்; இங்ங். னம் செல்பவன் காரியசித்திபெற்று வீரியமாய் விளங்கி கிற்பன். அந்த வெற்றி நிலையை உய்த்துணர இதில் உணர்த்தியுள்ளார். செல்லாதது இல் என்றது எல்லாம் அவனுக்கு இன மாக நேரே செல்லும் என்பது நன்கு தெரிய நின்றது. தான் செய்ய மூண்ட கருமத்தைப் பலமுறையும் மருமமாகத் தேர்ந்து தெளிந்து கொள்பவன் சீரிய வினே யாளய்ைச் சிறந்த அறிவாளியாய் உயர்ந்து விளங்கு கிருன். அவனுக்குக் காரியசித்தி யுண்டாகிறது. இவ்வுண்மை சுக்கிரீவன் பால் தெரிய நின்றது. ச ரி த ம் . வானா குலவிரனை இவன் வாலிக்குப் பயங்து கீண்ட காலமாக மறைந்து ஒதுங்கியிருந்தான். அவ் வாறு இருந்து வருங்கால் இடையே இராமனேக் கண் டான். நட்புக் கொண்டான். அந்தக் கோமகனுடைய அருந்திறலாண்மைகளேயும் பெருங்தகைமைகளேயும் இவன் நன்கு தெரிந்தான். தெரியவே அவ்விரக் குரிசி லேக்கொண்டு தன் பகைவனே வென்று தொலைக்க விரும் பினன். மதிமானை அனுமானுடன் கலந்து ஆலோசித்து உற்ற துணைகளோடு .ே ந .ே ர பகைமேல் சென்ருன். செல்லுங்கால் இராமனுடைய வீரத்திறல்களேத் தெளி வாகத் தெரிய அவாவினன். மாருதி மருமமாய்க் குறிப் 318