பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. வ லி ய றி த ல் 2ö49 மெல்லிய மயில் தோகைகளேப் பரப்பிய சகடமும் அச்சரக்கை மிகவும் அதிகமாக ஏற்றில்ை அதன் அச்சு ஒடியும். இறும்= இற்று ஒழியும். அளவோடு யாதும் அமைந்துவர வேண்டும் அளவு மீறினுல் அங்கே பழுது நேரும் என்பதை இது தெளிவா விளக்கியுளது. எடுத்துக்காட்டாக நேர்ந்தது ஒர்க் து உணர்ந்து தேர்ந்து தெளிந்து கொள்ள வந்தது. பிலி= மயிலின் தோகை. பறவைகளுள் மயிலுக்கு வால் வளமாய் வாய்ந்துள் ளது. அழகுடன் தொகுதியாய் அமைந்திருத்தலால் தோகை என நேர்ந்தது. தன் தோகையை விரித்து மயில் உவந்து ஆடுவதை எவரும் வியந்து கானுவர். அது முதிர்ந்தபோது தானகவே கீழே உதிர்ந்துவிடும். மலேச் சாரல்களிலும் காடுகளிலும் உதிர்ந்துகிடக்கிற தோகை களே வேடர்கள் தொகுத்துச் சேர்த்து விலைப்படுத்துவர். அவற்றை வண்டிகளில் ஏற்றி அயலே கொண்டுபோ கும் அளவு இந்நாடு பண்டு வளமாயிருந்தது. அவ்வுண் மையை இங்கே க ண் டு கொள்கிருேம். ஆலவட்டம் விசிறி முதலியன பீலியால் செய்யப்படும். பீலி மஞ்ஞை. === (சிலப்பதிகாரம் 2-53) வரையிட்ட வயங்குத்தார்ப் பீலி. (கலி 140) பழன மஞ்ஞை யுகுத்த பீலி. (புறம் 13) மால்வரை ஆலும் பீலி மஞ்ஞை. (பெரும்பாண் 380) பிலி நன்மா மயில். (சிந்தாமணி 236) பிலி மாமயில் பேடை. (பெருங்கதை 1, 53) பீலியும் கலாபமும் கூழையுமதற்கே. (பிங்கலந்தை) பிலியே ஆலவட்டம் பெருவரை கலாபி தோகை. (நிகண்டு) இவற்ருல் பீ லி தி லே ைய நாம் தெரிந்து கொள் கிருேம். மிக இலகுவான மெல்லிய கிலேயது. மயிலின் பின்புறத்தில் வாலாய் நீண்டுள்ளமையால்