பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2564 திருக்குறட குமரேச வெண்பா இட்டிய குயின்ற. (ஐங்குறுநூறு 215) சிறுமை, நுண்மை, சுருக்கம் என்னும் பொருளில் இ.து இவ்வாறு மருவி வந்துளது. இடுகு, இடுக்கு இட்டிது என்பன குறுமை சிறுக மைகளைக் கூர்ந்து உணரக் குறித்துள்ளன. இட்டாற்றுட் பட்டுஒன்று இரந்தவர்க் காற்ருது முட்டாற்றுப் பட்டு முயன்றுள்ளுர் வாழ்தலின் நெட்டாற்றுச் சென்று நிரை மனேயில் கைநீட்டும் கெட்டாற்று வாழ்க்கையே நன்று. (நாலடி 288) சிறுமையாய் வறுமைப்பட்டு வாழ்வதினும் கண் காணுத இடத்துக்குப் போய்விடுவது நல்லது என இது குறித்துளது. மேன்மையாவாழ்வதே மேலானவாழ்வாம். பொருள் இல்லையானுல் நல்ல அமைதியான வாழ்வு அங்கே இல்லே. வாழ்க்கைக்கு உயிராதாரமாயுள்ள பொருளே வீண் செலவு செய்யாமல் எவ்வழியிலும் விவேகமாய்ப் பேணி ஒழுகுவதே மேன்மையாம். செட்டும் சீரும் இருந்தால் சிறிய வருவாயிலும் சுகமாய் இனிது வாழலாம். அரிய புகழை அடையலாம். இவ்வுண்மை பூங்குன்றனர் பால் தெரிய வங்தது. ச ரி த ம் . இவர் பாண்டி நாட்டிலே பூங்குன்றம் என்னும் ஊரில் இருந்தவர். சிறந்த சீலமும் நிறைந்த நீ ர் ைம யு ம் தெளிந்த ஞானமும் உடையவர். சோதிடக் கலையில் மிகவும் வல்லவர் ஆதலால் கணியன் பூங்குன்றனர் என யாவரும் இவரைப் பிரியமாயழைத்து வந்தனர். அடக்க மும் அமைதியும் உடையவர். தலைமையான புலமை யாளராயிருந்தும் எந்த அரசரையும் பரிசில் கருதி இவர் பாடவில்லை. தமக்குச் சொந்தமாயிருந்த சிறிய கில வருவாயைக் கொண்டே இவர் சுகமாய் வாழ்ந்து வங் தார். இவரது மனைவி பெயர் சுமதி. இவரது குறிப்பு அறிந்து அக்குலமகள் நடந்துவந்தமையால் வாழ்வு தலே