பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. வ லி ய றி த ல் 257 F அங்கே ஒப்புரவின் தலைமையை உரைத்தார். இங்கே பொருளின் நிலைமையை உணர்த்துகிருர். ஆதலால் அதைேடு இது மாறுபடாமை அறிக. உளவரை தூக்கி ஒப்புரவு செய்: நல்லதேயாயி னும் அளவு அறிந்தே செய்ய வேண்டும். அளவோடு அமைந்து வாழ்வதே வளமான அறிவாண்மை யாம். பொருளும் பொருளாளனும் வளமாயிருந்து வந்தால் தான் ஒப்புரவு, ஈகை, புகழ், புண்ணியங்களேச் செய்ய லாம். பொருளை ஈவதில் மதியூகம் மருவியுளது. தனது குடிவாழ்க்கை மிடிவாய்ப்பட்டுப் பழுதுபடா தபடி பொருளேக் கவனமாய்ப் போற்றிவர வேண்டும். தனக்குப்போய்த் தானம் என்பது முதுமொழியாய் வந்துளது. உரிய உணர்வு அரிய ஞானமாகிறது. தன்னையும் தனது பொருளேயும் நன்னயமாய்ப் பேணி வருபவனே மன்னவனாய் நின்று மன்னிய அறங் க&ளச் செய்து மாட்சி அடைந்து கொள்கின்ருன். அளவறிந்து பேணுதவன் வளமழிந்து வருந்த நேர் கின்ருன். பிழையான உதவி பேரவலம் ஆகிறது. வண்டலங் கல்கொள்'மார்பரிச் சந்திரன் அண்டும் ஓர்முனிக் காத்தரும் வண்மையால் பெண்டு பிள்ளை பெருந்திருப் போய்விடக் கொண்ட துன்பம் குறிக்கவும் கூடுமோ? (குமணம்) உளவரை துக்கி ஒர்ந்து சிந்தியாமல் ஒ ப் பு ர வு செய்தமையால் அரிச்சந்திரன் அரிய .ெ ப. ரி ய அரச திருவை யிழந்தான்: உரிய மனேவியையும் உயர் குல மகனையும் பிரிந்தான். தானும் அடிமையாய்ப் புலேய னுக்கு ஏவல் செய்தான். இந்த நிலைமையை கினேந்து சிந்திக்க வேண்டும் என்று குமண மன்னனுக்கு அவன் தம்பி இன்னவாறு பொருளறிவைத் தெளிவுறுத்தி யிருக்கிருன். பொருளைப் பேண நேர்ந்தவர் அதனைப் பலவகைகளிலும் தலைமையாக் காண நேர்கின்ருர்,