பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2592 திருக்குறட் குமரேச வெண்பா காலமும் ஞாலமும் கருத வந்தன. உரிய காலத்தை ஒர்ந்து உற்ற இடத்தைச் சார்ந்து விஜன செய்யின் உலக முழுவதும் ஆள விரும்பினும் அவனுக்கு அது உரிமையாய் அமையும். ஞாலம்=உலகம். விரிந்து பரந்துள்ளது என்னும் ஏதுவால் நில வுலகத்துக்கு இப் பேர் நேர்ந்துள்ளது. கருதினும் என்பதிலுள்ள உம்மை அ ங் ந ன ம் கருதுவார் அரியர் என்பது தெரிய கின்றது. தமது நிஜலமைக்குத் தக்கபடியே எவரும் எண்ண நேர்கின்ற னர். உயர்ந்த சிந்தனே தோயநேர்ந்தால் அவர் உயர்ந்த மேலோராய் ஒளிமிகுந்து வெளியே தெரிய வருகின்ருர், மாந்தரினும் மேலான வேந்தரையே இங்கே தேர்ந்து வருதலால் ஞா ல மும் கருத்தும் இனமாய்ச் சார்ந்து வந்தன. உலகம் அடையக் கருதுவார் தலைமையாளரே. கைகூடும்=கைவசமாம். முழுதும் உரிமையாய் எளிதே வந்து எல்லா அரச செல்வங்களும் சேரும் என்பதை இங்ங்னம் தெளிய விளக்கினர். செயின் கூடும் என்றது அவ்வாறு செய்யாவழி யாதும் கைகூடாது என்பதைக் காட்டிகின்றது. குறித்த படி பலன் கிடைக்கவில்லையானல் கூறியபடி வினேயைச் சரியாகச் செய்யவில்லே என்று தெரிந்து தன் காரியக் கேட்டை மனிதன் சிந்திக்க வேண்டும். ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டாலும் இனமான இடத்தை எண்ணித் தெளியவில்லையாயின் எடுத்த கருமம் சிதையும் ஆதலால் இடத்தால் என அதனேயும் இ&னத்து உணர்த்தினர். அடுத்து வருகிற இடன் அறிதல் என்னும் அதிகாரத்திற்கும் ஈண்டு இடம் கொடுத்தபடியாம். காரிய சாதனைகளும் சீரிய விளைவு களும் தேர்ந்து சேர்ந்தவர் திறங்களும் கூ ர் ந் து சிங் தி த் து ஒர்ந்து உணர்ந்து கொள்ள வந்துள்ளன. காலம் அ றி ந் து செய்யின் அரிய வினே யாதும் இல்லை; எதையும் முடிக்கலாம் என்று முன்னம் குறித்