பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. கா ல ம் அ றி த ல் 2595 உறுதியும் ஊக்கமும் கரும சாதனங்களும் கால கிலேகளும் சரியாக அமையின் அரிய பெரிய காரியங் களும் இனிது முடிகின்றன. பலன்களும் வருகின்றன. ஆர்கலி ஞாலத்து அறம்காவ லால்சிறந்த பேரருளி ற்ைகுப் பெறலருமை யாதரோ? வார் திரைய மாமகர வெள்ளத்து நாப்பண்ணும் போர் மலேந்து வெல்லும் புகழ். (இரும்பல்காஞ்சி) உறுதியாய் ஊக்கி முயலும் தரும நீர்மையா ளர்க்குக் கருதிய கருமங்கள் எவ்வழியும் செவ்வையாக் கைகூடி வரும் என இது குறித்துள்ளது. காலம் அறிந்து வினேசெய்பவன் ஞால முழுதும் கைக்கொள்வன். இதுசாலிவாகனன் பால்தெரியவந்தது. ச ரி த ம் . இவன் தெய்வத் திருவருள் பெற்றவன். இவனு டைய பிறப்பும் இருப்பும் வளர்ப்பும் வாழ்வும் அதிசய மான விசித்திரங்களுடையன. கனகன் எனும் நாகவேங் தனுக்குச் சுமித்திரை எ ன் னு ம் பார்ப்பனி வயிற்றில் இவன் பிறந்தான். உரிய கணவனேக் கலவாமல் அயலா னேக் கலந்து கருவுற்ருள் என்று கறுத்து இனத்தவர் அவளே அயலே ஒதுக்கிவிட்டனர். அவளும் ஒதுங்கி மகப் பேறு அடைந்தாள். நருமதை நதியின் தென்பால் நாக மதி என்னும் ஊரில் ஒரு கு ய வ ன் வீட்டில் அவள் அடைக்கலம் புகுந்தாள். அக் குலாலன் பேர் இராம வேளான்; அவன் மனைவி அன்ன பூரணி. அந்த இருவ ரும் இந்த மைந்தனைச் சிங்தை உவந்து வளர்த்து வந்த னர். இவன் பருவம் அடைந்தான். அழகு அறிவு ஆற். றல்கள் எல்லாம் இவனிடம் ஏற்றமாயிசைந்திருந்தன. குயக்குடியில் வாழ்ந்து வந்தாலும் ஒரு கோமகனுடைய இயல்புகளே இவன் பால் இயல்பாய்க் குடிகொண்டு வந்தன. ஒத்த இளேஞர்களோடு விளேயாடும்பொழுது ஒரு க ச ன் அவர்கள் எல்லாரையும் குடிசனங்களாக அமைத்து வைத்துத் தான் ஒரு அரசன்போல் உல்லாச மாப் இவன் நடித்து வந்தான். அப்போது அ வ் வீ தி