பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25.96 திருக்குறட் குமரேச வெண்பா வழியே சோதிடத்தில் வல்ல ஒரு வேதியர் வந்தார். அவரை நோக்கி ஐயரே! நம்முடைய அரசாட்சி எப்படி யிருக்கிறது?’ என்று கேட்டான். ஆட்சி மாட்சியாகவே உள்ளது என்று அவர் உவந்து சொன்னர். அதைக் கேட்டு உள்ளம் மகிழ்ந்து அவர்க்கு உதவி புரிந்தான். மட்கலங்களே வனவதிலும் இவன் வல்லவயிைருங் தான். மண்ணுல் குதிரைகளே உருவாக்கி அவற்றில் உல்லாசமாய் ஏறி உற்சாகமாய் வீற்றிருந்து வந்தமை யால் இவன் சாலிவாகனன் என நேர்ந்தான். இவனு டைய செயல் இயல்களைக் கேள்வியுற்று விக்கிரமார்க்க மன்னன் இவனே நேரே அழைத்துவரும்படி இரண்டு படைத்தலைவரை அனுப்பின்ை. இவன் மறுத்துவிடுத் தான். அதுமுதல் உலகை ஆளும் அரச பதவியை எப் படியும் தான் அடைய வேண்டும் என்று இவன் அவாவி முயன்ருன். அதற்கு உரிய மந்திர முறைகளேப் பயின் ருன். காலம் கருதி இடம் நோக்கிச் சாலவும் சாதுரிய மாய்ப் படையெடுத்துச் சென்று உச்சைனி அரசைக் கவர்ந்து கொண்டான். கொற்றவய்ைக் கோ முடிசூடி ஆண்டான். இவன் ஆட்சி தொடங்கிய காலத்திலிருந்து சாலிவாகன சகாப்தம் என்று இவன் பேரால் காலம் கணிக்கப்பட்டு வருகிறது. கி. வி. வருடத்துக்கு எழுபத் தெட்டு ஆண்டுகள் இது பிந்தியதாம். ஆகவே இவன் இருந்த காலத்தை நாம் அறிந்து கொள்கிருேம். காலம் கருதி இடத்தால் வினே செய்யின் ஞாலம் கருதினும் கைகூடும் என்பதை இவன் கண்கூடாக் காட்டி கின்ருன். இவனுடைய மதி நலனும் மன உறுதியும் வினையாண் மையும் வீரத் திறலும் அதிசய கிலேயின என்று. மேலோர் யாவரும் வியந்து துதி செய்துள்ளனர். விரிவை அ க் கி னி புராணத்தில் காண்க. காலம் கருதி முயல்பவனைக் காதலித்து ஞாலம் கயந்து வரும். உரிய காலத்தை ஒர்ந்து முயல்.