பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2806 திருக்குறட் குமரேச வெண்பா நேர்த்து நிகரல்லார் நீரல்ல சொல்லியக்கால் வேர்த்து வெகுளார் விழுமியோர். (நாலடி 64) வெகுளியின் நிலைமையையும் வெகுளாதார் தலை மையையும் இது விளக்கியுளது. வேரம் என்று வெகு விக்கு ஒரு பெயர் விளேங்துள்ளது. மரத்துக்கு மூல வேர்போல் சினத்துக்கு வேரம் திரமாயுளது. புறம் வெகுளார்; உள் வெகுள் வர் என்று கூறி யிருக்கலாம்: பாவின் தளேயும் பிழையாகாது: பொரு ளும் தெளிவாயிருக்கும். இருந்தும் அவ்வாறு கூற வில்லை. ஏன்? நீண்ட காலமாய் மூண்டு நின்று நேரம் நோக்கிச் சலஞ்சாதிக்கும் கோபத்தையே ஈ ண் டு இனமா உணர்ந்து கொள்கிருேம். வேரம்= வைரமான சினம். பொள்ளென என்றது விரைவுக் குறிப்பு. போர்த்ததன் அகலம் எல்லாம் பொள்ளென வியர்த்துப் பொங்கி. (சீவகசிந்தாமணி 256) பொள்ளெனச் சென்னி பூமி தோய. (பெருங்கதை 3 : 24) இவை இங்கே எண்ண வுரியன. பொள் என= விரைவாக. கரும வீரம் காலம் கருதியுளது. பகைவர் அல்லல் புரிந்து எள்ளல் இழிவுகளைச் செய் தாலும் ஒள்ளியவர் பொள்ளென. வெகுளார்: உள்ளம் பொறுத்துக் காலத்தை எதிர்நோக்கி அடங்கியிருப்பர். இலங்கை புகுந்து சீதையைத் தேடிய அனுமான் இராவணன் மாளிகையை அடைந்தான். நடுநிசி. அமளி யில் அவன் உறங்கிக் கிடந்தான். அவனேக் கண்டதும் மாருதிக்குக் .ே கா. ப ம் மூண்டது. இராமநாதனுக்குத் தீமை செய்த தீயவன் என்று உள்ளம் கொதித்தான்: உருத்துத் துணிந்தான். துணிந்தவன் இது சமையம் அன்று என்று பொறுத்துச் சினம் தணிந்தான். ஆலம்பார்த் துண்டவன்போல் ஆற்றல் அமைந்துளர் (எனினும் சீலம்பார்க் குரியோர்கள் எண்ணுது செய்பவோ?