பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2508 திருக்குறட் குமரேச வெண்பா இத்தகவில் மொழிசெவியின் எரிவாளி என மூழ்க இருந்த வேந்தர் தத்தமன மடிந்துருகத் தருமன்மதி முகம் நோக்கித் தம்மி னுேக்கி வித்தகவெங் கதை நோக்க விறல் வீமன் விசயனும்தன் வில்லே நோக்க ஒத்த மன னுடையிளேயோர் உருப்பமடக் கினன் உண்மைக் குறுதி போல்வான். (2) (பாரதம்) பகைவன் படுகேடு செய்தபோதும் வெகுளாதிருக்கு மாறு தம்பிமாரைத் தருமர் அடக்கியிருப்பதை இதில் அறிந்துகொள் கிருேம். பின்பு வனவாசம் புரிந்து விராட ககாத்தில் தங்கியிருக்கும்போது கீசகன் துரோபதை யை விழைந்தான். விழையவே வீமன் வெகுண்டு மூண் டான். அக் கொடியவனேக் கடுத்து ஒழிக்க விரைந்தான். அப்பொழுதும் தருமர் குறிப்போடுதடுத்துநிறுத்தினர். அடுதொழில் பலாயன ன் அழுத மின்னேயும் கடுமையிற் பின்தொடர் காளே தன்னே யும் படருறக் கண்டுதன் பாங்கர் நின்றதோர் விடவியைப் பிடுங்குவான் வெகுண்டு நோக்கினுன். (1) கனிட்டனது எண்னம்.அக் கங்கன் ஆகிய முனித்தகை புனர்ந்தவன் முகத்தை நோக்கியித் தனிப்பெரு மராமரம் தழல்கொ ளுந்திடா துனக்கடும் இந்தனம் அன்றென் ருேதினு ன். (2) கண்னெருப் பெழவிரு கைந்நெருப்பெழ உண்ணெருப் பெழத்தன துடனெருப்பெழ மண்ணெருப் பெழவரு மடையில் எய்தினுன் திண்னெருப் பினுமிகு சினங்கொள் விமனே. (விராட பருவம்) வீமன் சினம் வெளிப்படாவாறு தமையன் இவ்வாறு அடக்கியிருக்கிருன். எதிரிகள் கோபத்தை மூட்டினுலும் மதிநலமுடையவர் விரைந்து வெகுளார்: க | ல ம் பார்த்தே வெகுள்வர்: கருதியதை முடித்துக் கொள்வர் என்பதை ஞாலம் இவர் பால் நன்கு தெளிந்துகின்றது.