பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. காலம் அறிதல் 261 நகைசெய த மர் போல் சுமந்திடுக; நாடுங் காலம் வந்துவிடின் தகைசெய் வினே யை அவ்வளவில் தப்பா வண்ணம் முடித்திடுக. (விநாயக புராணம்) பகைவரை அழித்து ஒழி என இது குறித்து ளது. தனக்கு இடராய் மூண்ட செறுநரைச் சிதைத் து ஒழிக்காமல் செழிப்போடு வளரவிட்டிருந்தால் அந்த அரசனுடைய வாழ்வு பரிதாபமா யிழிந்துபடும்; அவனும் ஆண்மையற்றவய்ைக் கீழ்மை யடைய நேர்வன். திருந்தலர் புகழொடும் செல்வம் துய்த்திட வருந்தியும் கருணையோடு அடிசில் வாய்மடுத்து அருந்தியும் துயின்றும் நல்லின்பம் மாந்தியும் இருந்துயிர் சுமப்பதின் இறத்தல் நன்றரோ. (காசி கண்டம்) பகைவரைக் கடிந்து ஒழிக்காமல் ஒருவன் உண்டு களித்திருப்பதைவிட இறந்துபோவது நல்லதென்று இதுவரைந்து காட்டியுளது. மாறுபட்ட செறுநரை நீறு படச் செய்வதே அரசனுக்கு ஆண்மையான மேன்மை யாம். கலகத் தலைவர்களேக் களைந்து ஒழித்தவன் உல கத் தலைவனப் உயர்ந்து ஒளி மிகுந்து விளங்குகிருன். ஏற்ற காலம் வாய்த்தபொழுது பகைவரை மாய்த்து முடித்தவன் மதிப்பும் மாண்பும் மிகப் பெறுவன். இது இந்திரன் பால் தெரிய வங்தது. ச ரி த ம் . கிவாத கவசர் என்பவர் அசுரர் மரபினர்: அடலாண் மைகள் உடையவர். அரிய பல வரபலங்களேப் பெற்ற வர். போர்த் திறங்களில் வல்லவர். எப்பொழுதும் நீங்காமல் மார்பில் கவசங்களே அணிந்திருந்தமையால் கிவாத கவசர் என நிலவி நின்றனர். கடல்கள் புடை சூழ்ந்து அரணுக அமைந்திருந்த தோயமாபுரம் என்னும் தலைமையான நகரில் அவர் கிலேயாக வாழ்ந்து வந்தனர்.