பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2616 திருக்குறட் குமரேச வெண்பா கிடைத்தற்கு அரிய சமையம் கிடைத்தால் முடித் தற்கு அரியதை அரசர் விரைந்து முடித்துக் கொள்வர். இந்த முடிவு வாயு பகவான்பால் தெரிய வந்தது. ச ரி த ம் . ஆதிசேடனும் வாயு பகவானும் அ ட லா ண் ைம குறித்து ஒருமுறை வாதாட நேர்ந்தனர். வேகத்தில் காற்றும், விவேகத்தில் சேடனும் சிறந்தவர் என்று பேர் பெற்றிருந்தவர் தேக பலத்திலும் யார் உயர்ந்தவர்? என்பதை அன்று சோதிக்க மூண்டனர். இவருடைய வலிமை கிலேமைகளே அறிந்து தெளியவிழைந்து தேவர் கள் திரண்டனர். யாவரும் மேருவை அடைந்தனர். மேரு மலையின் சிகரங்களே ஆதிசேடன் ஆயிரம் தலே களாலும் வலிமையாய் அழுத்திக்கொள்ள வேண்டும். அந்தப் பிடியிலிருந்துநீக்கி ஒரு சிகரத்தையேனும் வாயு பெயர்த்து எறிய வேண்டும் என முடிவு செய்து இரு வரும் மூண்டனர். முனேந்து முயன்றனர். இரண்டு பேரும் மானவீரத்தோடு ஆனவரையும் அடலாண்மை புரிந்தனர். வாயுவால் யாதும் அசைக்க முடியவில்லே. நாக வேந்தனே வேக வேங்தன் வெல்ல முடியவில்லையே! என்று விண்ணுேர் சிலர் வியந்து பேசினர். அந்தவுரை கள் சேடனுக்குப் பெருமகிழ்ச்சிகளே அளித்தன:பெருஞ் செருக்கும் நீண்டது. தன்சீனப் புகழ்ந்து கூறுவோர் யார்? என்று காண விழைந்து அயலே ஒரு தலையைச் சிறிது துரக்கி அவன் மேலே நோக்கினன். அந்தச் சமை யத்தில் விரைந்து முனேங்து மூன்று கொடுமுடிகளேப் பேர்த்து வானவீதியில் வாயு வேகமாய் வீசின்ை. வீச வே வெற்றி! வெற்றி! என்று காற்றின் வேந்தனே யாவ ரும் போற்றிப் புகழ்ந்தனர். செய்ய முடியாது என்று சிந்தை தளர்ந்து தோல்வியை கினேந்து துளங்கியிருந்த இவன் ஏற்ற நேரம் வாய்த்தவுடனே ஆற்றலோடு மூண்டு வி னே ைய விரைந்து செய்து முடித்தான். எய்தற்கு அரியது இயைந்தால் செய்தற்கு அரியதை அக் கிலேயே செய்க என்பதை அன்று இவன் செய்து காட்டி ஞன். இவனது கருமக் காட்சி அரிய மாட்சியா கின்றது.