பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 18 திருக்குறட் குமரேச வெண்பா எய்தற்கு அரிய சமையம் இயைந்தபோது செப் தற்கு அரிய செயலைச் செய்து முடித்தமையால் காலம் அறிந்து புரிந்த கருமவீரன் என்று ஞாலம் அறியத் தன் வேக விவேகங்களே இவன் விளக்கி நின்றன். உரவி ல்ைவட மேருவைக் கொடுமுடி ஒடித்து விரவி என் பெருந் தாதை நின் தாதையை வென்ருன்; பரிவில் நின்னேயான் வெல்வன் என்று அவனிபன் பதாகை அாவை மற்றிவன் பதாகையில் அனுமன்வந் தடுத்தான். பாரதம், நிரை 66) விசயைேடு துரியோதனன் போராட நேர்ந்தான். அவன் தேரில் இருப்பது அரவக் கொடி இவன் தேரில் உள்ளது அனுமக் கொடி. இரண்டு தேர்களும் நேர் எதிர்ந்தன: எ திரவே அனுமான் அரவத்தை நோக்கி விரவாதம் கூறின்ை: ஏ. பாம்பே! உன் தாதை ஆகிய ஆதிசேடனே என் தந்தை மேருகிரியில் அன்று வென்று தொலைத்து .ெ வ ற் றி மிகப்பெற்ருன்: இன்று நான் உன்னே இங்கே வென்று ஒழித்து வெற்றி பெறுவேன்' என்று உரைப்பதுபோல் கொடியாடையில் உ லா வி விளங்கின்ை என இது விளக்கியுளது உரைக் குறிப்பு களேக் கூர்ந்து ஒர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும். அரிய சமையம் அமையின் அதுவே பெரிய திருவாம் பெறல், உரியபொழுதை உரிமையுடன் போற்று. 490. கீசகன் கிட்டியதும் கெட்டியாய் வீமனுடன் கூசாதேன் கொன்ருன் குமரேசா-பேசாமல் கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த விடத்து. (ம்) இ-ள். குமரேசா மோனமாய் அடங்கியிருந்த வீமன் ஏன் கீசகன் கிட்டியவுடன் விரைந்து கொன்ருன்? எனின், கூம்பும் பருவத்து கொக்கு ஒக்க: சீர்த்த இடத்து மற்று அதன் குத்து ஒக்க என்க. -