பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26.20 திருக்குறட் குமரேச வெண்பா காரியங்களே மருமமாய் மருவியிருந்து சாதிக்கும் ஆற்ற லுடையார்க்கு, கொக்கு இப்படி ஒப்பனையாப் வாப்க் துளது. பகை வெல்லும் பாங்கு இங்கு அறிய வுரியது. ஒடுங்கி யிருந்தே உன்னியது முடிக்கும் கொடுங்கால் கொக்கின் கோளின மாகிச் சாய்ப்பிட மாகப் போர்ப்படை பரப்பி வலிகெழு வேந்தன வணக்குதும். (பெருங்கதை 3:17) கொக்கைப்போல் கூம்பியிருந்து ஏம்பலான இடத்தே வலிய பகை வேந்தனே வெல்ல வேண்டும் என்று ஒரு கருமவீரன் கருதி யுறுதி செய்து தேர்ந்துள்ள தீரத்தை இதில் கூர்ந்து ஒர்ந்து கொள்ளுகிருேம். அரைசே பொன்னம் பலத்தாடும் அமுதே என்றுன் அருள் நோக்கி இரை தேர் கொக்கு ஒத்து இரவுபகல் ஏசற் றிருந்தே வேசற்றேன்; கரை சேர் அடியார் களிசிறப்பக் காட்சி கொடுத்துன் அடியேன்பால் பிரை சேர் பாலில் நெய்போலப் பேசா திருந்தால் ஏசாரோ? (திருவாசகம்) சிவபெருமானது திருவருள்ே அடைய மாணிக்க வாசகர் கருதியிருந்த நிலையை இவ்வாறு உவமையோடு, கூறியிருக்கிருர். இரைதேர் கொக்கு ஒத்து இரவு பகல் உன் அருள் கோக்கி ஏசற்றிருந்தேன் என்று குறித்திருத் தலால் குறிக்கோளோடு இவர் இருந்துள்ள சிவயோக கிலேமையைக் கூர்ந்து ஒர்ந்து உணர்ந்து கொள்கிருேம். மீன் உண் கொக்கு. (புறம் 277) பைங்கால் கொக்கின்பகுவாய். (புறம் 342) கொக்குவாய் அன்ன. (பெருங்கதை 1 : 42) மீன் உண் குருகு. (ஐங்குறுநூறு 184) கொக்கின் வாய், கால், இரை, கிலே முதலியவைகளே இவை இவ்வாறு விரித்துக் குறித்துள்ளன.