பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. இ ட ன் அ றி த ல் 26.25 காணுதற்குக் கண்: செய்தற்குக் கை: நடத்தற்குக் கால்: நடித்தற்கு மேடை நலமா யிருத்தல் போல் கருமம் புரிதற்கு இடம் பலமா யுள்ளது. தானம் பெற்ருன், வானம் பெற்ருன். என்னும் முதுமொழி மதிநலமுடையது: மாண் பொருள்கள் பல மருவியது. இடத்தின் மகிமையை இனிது துலக்கி வலிமை நிலையை இது விளக்கி யுளது வான்சேரின் புள் அஞ்சா; வல்லரில் சுற்றிய கான்சேரின் மானின் கணம்அஞ்சா-வான் சேர் சிகர வரை சேரின் தேன் அஞ்சா; அஞ்சா மிகுநீர்க் கயம் சேரின் மீன். (பாரதம்) வான் சேர்ந்த பறவை, கான் சேர்ந்த மான், மலே சேர்ந்த தேனி, நீர் சேர்ந்த மீன் யாருக்கும் அஞ்சாமல் யாண்டும் உச்சமாய் வாழும். அதுபோல் உரிய இடத் தை அடைந்தவர் பெரிய வலியுடையராப் என்றும் பெருமையுடன் நிற்பர் என இ.து உணர்த்தி யுளது. புள் முதலிய கான்கு இனங்களும் இடத்தால் வன்மை பெற்றுள்ளதை ஒர்ந்து உணர்ந்து மனிதன் அரசினத் தேர்ந்து தெளிந்து உயர்ந்து கொள்ள வேண்டும். ஒருவன் பெற்றுள்ள வலி முதலியவைகளுக்கெல் லாம் உற்ற துணேயாய் உறுதி பயந்து நிற்பது இடமே என்பது தெரிய இறுதியில் கின்றது. வலி காலங் களுக்கு ஈற்றில் கின்ற இது எல்லா ஆற்றல்களுக்கும் ஏற்றம் பயந்து வருதலால் ஆற்றல் மிகுந்த அரசரும் இடத்தை உரிமையோடு போற்றிக் கொள்ளுகின்றனர். வலியே காலம் இடம் இவற்ருல் மாற்ருன் தனக்கும் உனக்கும் உள பலவாம் நிலேயும், வினே தொடங்கும் பண்பும், அதற்காம் இடையூறும், விலக ததனே விலக்குவதும், வெல்லு மாறும், வென்றதனுல் உலவாப் பயனும் முதலனேத்தும் ஒர்ந்து தெளிந்தே வினே செய்க. (விநாயக புராணம்) 329