பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2628 திருக்குறட் குமரேச வெண்பா சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் அரண் சேர்ந்தாம் ஆக்கம் பலவும் தரும் என்க. மிகுந்த திண்மை தோய்ந்த வன்மையாளர்க்கும் தகுந்த அரணேச் சார்ந்து நிற்கும் ஆக்கம் அரிய பல நன்மைகளே நேரே சீரோடு அருளும். ஏற்ற இடம் காணும் வரை எவ்வினையும் தொடங்: காதே என்று முன்பு கூறினர். திடமான அந்த அரண் வலியைத் தெளிவாக இதில் அறிவுறுத்துகின்ருர். முரண் = வன்மை; மாறுபாடு. மொய்ம்பு=தோள்; வலிமை. பகையும் வலியும் முரண் எனப் பகர்வர்; வலியும் தோளும் மெய்ம்பென லாகும். (பிங்கலந்தை) முரண் மொய்ம்புகளே இவை முறையே குறித்துள் ளன. அரிய திடமும் உரிய இடத்தால் உயரும். முரண் சேர்ந்த மொய்ம்பினவர் என்றது திண்மை செறிந்த தோள் வன்மையுடைய தீரரை. அவரது இயற் கையான வ லி ைம தலைமை முதலிய கிலேமைகளே உம்மை உயர்வாக உணர்த்தி நின்றது. அடலாண்மையும் உடல் வலிமையும் உடைய வீரர்க் கும் இடவலி தேவையா? எனின், அவர்க்கும் அ.து. அவசியம் தேவையாம். தோள்வலி ஆள்வலி வாள்வலி வேல்வலி வில்வலி துனேவலி மனவலி மதிவலி முதலிய எல்லா வலிகளுக் கும் இடவலி உறுதி நிலையமாய் அதிசய ஆற்றல்களே அருளி வரும். அவ் வரவு உறவாய் உணர வந்தது. அரண் என்றது தன் சீனச் சார்ந்தவருக்கு எதிரி களால் இடர்கள் உருமல் இனிது பாதுகாத்து உறுதி பயந்து கிற்கும் இடம். தஞ்சம் என்று அடைந்தவரை அஞ்சேல் என்று ஆதரித்தருளுவது இ ைற வ ன து இயல்பு. அரனது அந்த அதிசய நீர்மை அரணிடம் அமைந்து யாவர்க்கும் இதமாய் ஆதரவு புரிந்துள்ளது.