பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. இட ன அ றி த ல் 2b& 3 அடுதல்=கொல்லுதல்; வெல்லுதல். .ே பா. ரி ல் மூண்டபோது பகைவரைக் கொன்று வெல்லுவதும், கொல்லாமல் வெல்லுவதும் உண்டு. முன்னது கொற் றம், பின்னது வெற்றி. போராற்றல் வழியே பேராற் றல்கள் வெளியாய் அரசரை வியன விளக்குகின்றன. போற்ருர் = பகைவர். போற்றுபவர் = நண்பர். போற்ருமல் துரற்றி இகழ்ந்து துயர் செய்பவர் பகைவர் ஆதலால் அவர் இவ்வாறு பேர் பெற்று நின்றனர். போற்றர். (புறம், 2) போற்ருர், (பரிபாடல் 4) போற்ரு மாக்கள் துாற்றும் பழிமொழி. (பெருங்கதை, 1) இவற்றுள் போற்ருர் குறித்து நிற்றல் அறிக. எள்ளி இகழ்ந்து இடர்செய்ய நேர்ந்தவரை வேந்தர் அழித்து ஒழிப்பர். அந்த அழிவுநிலை அடுப என்ற தல்ை அறிய வந்தது. அடவுரிய வன்மை இடம் அருளுகிறது. முன்பு ஆற்றலுடையார்க்கும் அரண் வேண்டும் என்ருர்: இதில் ஆற்ருதவர்க்கும் இடவலி திடமாய் ஏற்றம் தரும் என்கின்ருர். மெலியவரையும் வலியவராக்கி உற்ற இடவலி வெற்றியும் ஆக்கமும் விளேத்துவரும் ஆதலால் அதனே உறுதித் துணையாகக் கருதிப் போற்றிக் கொள்ள வேண்டும். சாதனங்கள் சரியாக அமைந்தால் காரியங் களே எங்கும் நன்கு சாதித்துக் கொள்ளலாம். சாதனம் பக்கம் தாபரம் வாய்புலம் மருங்கு பாங்கு நத்தம் வைப்பு தலைஇடம் அருகு தானம் கண் இடை நிலைபதி உறையுள் நிசாதனம் முன்னர். (பிங்கலம்) என இன்னவாறு பல பெயர்கள் இடத்துக்கு எய்தி யுள்ளமையால் இதன் கிலேமை தலைமைகளே உன்னி உண்ர்ந்து கொள்கிருேம். உரிய தானமே எவர்க்கும் 330