பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. இ ட ன் அ றி த ல் 2637. வினையாண்மைகள் எவர்க்கும் எவ்வழியும் பெரிய மேன்மைகளே அருளி வருகின்றன. - துன்னியார் என்றது வினேசெய்யத் துணிந்து மூண்டு நிற்கின்ற மன்னரை. துன்னுதல்=நெருங்குதல்: சேர்தல். கருமம் புரிய உரிமையாய் மருவி நிற்பவர் அதற்கு உரிய மருமங்களே யெல்லாம் நன்கு தெரிந்து திண்மையாய்ச் செறிந்து கிற்க வேண்டும் என்பது துன்னி என்பதால் ஈண்டு உன்னி உணர வந்தது. துன்னியார். (குறள், 188) துன்னத் துறந்தார். (குறள், 1250) துன்னினர். (நீலகேசி 347) துன்னி யிருவர். (பழமொழி 347) இவை இங்கே எண்ணி அறிய வுரியன. செயல்களே மயலறத் தேர்ந்து இடம்தெரிந்து யாவும் துன்னிச்செயின் துன்னியார்க்கு வெற்றியாம். துன்னது செய்யின் எண்ணியார்க்கு ஏற்றமாம். .ெ த வி வ ர் செருக்கு அழிந்து ஒழியச் செருச் செய்பவனே எவ்வழி யும் மேன்மையாய் இசை பெற்று உயர்ந்து வருகிருன். காரிய வெற்றிக்கு உரிய சீரிய சாதனங்களே ஆதச வோடு கருதிக் கொண்டு காலம் ஒர்ந்து இடம் தேர்ந்து உறுதி தோய்ந்து ஊக்கி வினைசெய்ய வேண்டும். அந்த வினையாண்மையே வேந்தர்க்குப் பேராண்மையாய்ப் பெரிய ஆக்கங்களே உரிமையோடு அருளி வரும். = நஞ்சுறை படைகள் கற்று நவையுருது ஒன்ன லாரை வஞ்சினத் தெறியும் வீரர் வளநக ரதனை மாற்ருேர் இஞ்சியைச் சூழ்ந்து போருக்கு எய்தினும் எண்ணியன்றி. வெஞ்சினத் தின மேற் கொண்டு விரைந்தமர் இயற்றச்

  • (செல்லார். (கந்தபுராணம்) அமர் செய்ய நேர்ந்த அரசரது அமைதியை இது குறித்துளது. எதையும் எண்ணி ஆராய்ந்து இடம் கண்டு துன்னிச் செய்வதே மதிமாண்புடைய மன்னர் இயல்பாம் என்பதை இதில் அறிந்து கொள்கின்ருேம்.