பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2644 திருக்குறட் குமரேச வெண்பா நீரில் இருக்கும்பொழுது யானேயை இழுக்கவல்ல முதலே நிலத்தில்வரின் பூனேயையும் பிடிக்கமுடியாது: கில பிரிந்தால் எவரும் இழிவுற நேர்வர் என இது குறித்துள்ளது. அரசரக்கு உரிய உறுதி அறிய கின்றது. இந்த உவமையைத் .ெ த லுங் கு க் கவிஞராகிய வேமநரும் விளம்பியிருக்கிரு.ர். அயலே வருவது காணுக. நீள்ள லோந முசலி நிகுடி ஏநுக தீசு பைட்ட குக்க சேத பங்க படுது; ஸ்தாந பலமு காநி த ந பலமு காதய்யா விஸ்வ தாபி ராம விதுர வேமா. (வேமநபத்தியம்) நீருள் முதலே யானேயைப் பிடித்துவெல்லும்; வெளியே வரின் நாயும் அதனேக் கடித்துக் கொல்லும்; ஆகையால் யாருக்கும் தானத்தின் பலமே யன்றித் தன் பலம் இல்லை என்பதை மனிதன் அறிந்து கொள்ள வேண்டும் என இவ்வாறு அவர் அறிவித்துள்ளார். நிலத்தில் வலியுடையது யானே நீரில் வலியது. முதலே. கிலேமாறவே புலேயுற நேர்ந்தன. தமக்கு உரிமையான தானமே எ வ ர் க் கும் பெருமையான மேன்மையாய் யாண்டும் வெற்றியை அருளும். தனக்கு உரிய வலிய இடித்தை ஒருவன் நீங்கிப் போனல் அவனுக்குப் பெரிய இடர் ஒங்கி வரும். இது கசேந்திரன் பால் தெரிய வந்தது. - ச ரி த ம் இது அதிசயமான ஒரு மதயானே. முன்பு இந்திரத் துய்மன் என்னும் மன்னனுயிருந்தவன் பின்பு அகத்திய முனிவர் சாபத்தால் யானையாயின்ை. சொல்லாடல் ஒன்று தவிர மற்ற எல்லா மனித வுணர்ச்சிகளும் இத னிடம் இனிதமைந்திருந்தன. வானவர்களுக்கு இந்திரன் போல் யா ஆன இனங்களுக்கெல்லாம தலைமையான வேந்தனுய் விளங்கியிருந்தமையால் கசேந்திரன் எனப் பேர்பெற்று விளங்கி நின்றது. கசம்=யானே. ஒருநாள் நெடிய மடுவில் இறங்கி இது நீர் பருகியது. அங்கே