பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

?648 திருக்கு ட் குமரேச வெண்பா மனிதர்க்குக் கால்க ள் அமைந்திருத்தல் போல் அவை தேர்க்கு அமைந்துள்ளன. விரைந்து உருண்டு செல்லவுரிய கருவியும் வலிமையும் தெரியக் கால்வல் என்ருர். சக்கரம் என்னது கால் என்றது செயல்தெரிய. செல்வம் சகட க்கால் போல வரும். (நாலடி 2) கால் இதில் வந்துள்ளமை காண்க. வண்டி உழவர்க்கு உரியது; தேர் அரசர்க்கு உரியது. அந்த வரிசை தெரிய அது இங்கே மருவி நின்றது. வேந்தர் ஒர்ந்து செய்ய வேண்டிய நெறிமுறைகளேயே உணர்த்தி வருகிருர், நாவாய்=மரக்கலம், மிதவை, வங்கம், தோணி, கப்பல் என இதற்குப் பெயர்கள் வந்துள்ளன. கடல் நடுவே பாய் விரித்து ஓடும் இயல்பினது ஆதலால் காவாய் என வந்தது. முந்நீர் வழங்கும் நாவாய். (புறம் 13) கரை சேரும் நாவாய். (பரிபாடல் 10) கடல் நடுவண் நாவாய். (பெருங்கதை 3, 20) இவற்றுள் நாவாய் இவ்வாறு வந்துள்ளது. பண் ணுர் களிறேபோல் பாய் ஓங்கு உயர்நா.ாய் கண்ணுர் கடல் மண்டிக் காற்றில் கவிழுங்கால் மண்ணுர் மணிப்பூணுேய் மக்கள் உறுந்துன்பம் நண்ணு நரகத்தின் நான்கா மடியன்றே. (சீவக சிந்தாமணி 2793) கடலிடையே நாவாய் கவிழ நேர்ந்தால் மக்கள் பதைத் துத் துடித்துப் படுங் துன்பங்களே இது குறித்துள்ளது. பித்த மயக்காம் சுறவெறியும் பிறவிப் பெரிய கடல் கடக்க உய்த்து மீண்ட நாவாயில் தாமும் போவார் ஒக்கின்றர். -- (இராமா, 2:5;73) இறந்துபோன தசரதன் உடலைச் சுற்றியிருந்த அவனுடைய மனைவியர் கிலேயை இது வருணித்துளது. அந்த உடலில் இருந்த உயிர் பிறவிக்கடலேக் கடந்து பேரின்ப முத் தி யை ப் பெற்றுள்ளது. அதுபோல் தாமும் அதனைப் பற்றிக்கொண்டு உய்யவேண்டும்