பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 இ டன் அறிதல் 2649 கrன்று உறுதி பூண்டு பொறுதியுடன் மூண்டு நின்றனர் என்னும் இது ஈண்டு ஊன்றி உணரவுரியது. கரிய பெரிய கடலேக் கடத்தி உற்றவரை உரிய கரையில் சேர்க்க வல்லது நாவாய் என்பது இங்கே கன்கு தெரிய வங்தது. இவ்வளவு சீரும் சிறப்பும் நீரில் பெற்றுள்ள இது நிலத்தில்வரின் ஒரு சிறிதும் நகராது. தன்மேல் எறியுள்ள வீரர்களே யாண்டும் விரைந்து கொண்டு சென்று அவர்க்கு வெற்றித் திருவைத் தருவது தேர். நிலத்தில் இத்துணே மகிமை யுற்றுள்ள இது நீரில் புகுந்தால் கிலே குலைந்து தாழ்ந்துபோம். இந்த நிலைமைகளே உய்த்து உணர்ந்து அரசர் தலைமைகளைத் தேர்ந்துகொள்வது நல்லது. எத்தகையவரும் தத்தமக்கு உரிமையான இடத்தை உறுதியாய் எய்திகின்றே எதையும் கருதிச் செய்யவேண்டும். மாற்றலர் வலிமை ஒர்ந்து, மருவிய பொழுதைத் தேர்ந்து, ஏற்றமாம் இடத்தை எய்தி, எதிர்வன எல்லாம் எண்ணி, ஊற்றமாய் உறுதி நாடி உறுபடை ஊக்கி நின்ருல் ஆற்றல்கள் எல்லாம் அங்கே அடையுமால் யாரும் வெல்வார் வலி காலம் இடம் முதலிய நிலைகளைத் தெளிவாகத் தெரிந்து வினைபுரிந்து வருபவர் எவ்வழியும் வெற்றியை எளிதே அடைந்து வியயைப் உயர்ந்து கொள்வர் என் பதை இதில் அறிந்து தெளிந்து கொள்கிருேம். திண்மையும் திடமும் தனக்கு எவ்வளவு அமைந் திருந்தாலும் எதிரியின் தன்மையும் இடமும் அறியாமல் போனல் அவன் அவமானமடைந்து இழிந்து படுவான். இவ்வுண்மை இராவணன் பால் தெரிய வந்தது. ச ரி த ம். அரிய திறலுடைய பெரிய வேந்தனை இவன் தனது அழகிய இராசமாளிகையுள் அரியனே யில் அமர்ந் திருக்கும்பொழுது ஒருநாள் நாரதமுனிவர் அங்கே வங்தார். வந்த அந்த முனிவரை இவன் உவந்து உப அசரிக்கவில்லை. அயலே யிருந்த ஆ த ன த் தி ல் அவர் 332