பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26.50 திருக்குறட் குமரேச வெண்பா இயல்பாயமர்ந்தார். இதமாய்ப் பேசினர்; மன்னர் பெரும! உங்கள் புகழ் எங்கும்.ஒங்கி ஒளிவீசிவருகிறது: யாவரும் புகழ்ந்து வருகின்றனர்: ஒருவன் மாத்திரம் இகழ்ந்து நிற்கின்ருன்; அவன் ஒரு வானரர் தலைவன்: கிட்கிங்தை நகரிலிருக்கிருன்: வாலி என்னும் பேரினன். வாலி வால் எதிரே இராவணன் கோல் அதிரும் என இவ்வாறு கேலியாய்க் கூறி வருகிருன் ' என்று கூறி விட்டு அவர் விடைபெற்றுப் போயினுர். மறுநாளே இவன் போருக்கு எழுந்தான்: நேரே அவன் ஊருக்கு வந்தான். அப்பொழுது வா லி அங்கே யில்லே. சிவ பூசை செய்யும்பொருட்டு வழக்கம்போல் அவன் கடற் கரைக்குப் போயிருந்தான். இவனும் அங்கே போனன். அவனுடைய நெடியவால் நீண்டுகிடப்பதைக் கண்டான்: அதனைப் பற்றிப் பிடித்தான், கையை அது சுற்றிக் கொண்டது . மற்றக் கைகளாலும் கால்களாலும் அதைத் தள்ளின்ை. எல்லாவற்றையும் சுற்றிக் கொள்ளவே அந்த வால் துனியில் இவன் சுருண்டு கிடந்தான்: பூசையை முடித்துவிட்டு வானவீதிவழியே தாவித் தனது அரண்மனேயில் வங்து அவன் அமர்ந்தான்; வாலில் கட் டுண்டு கிடப்பவனேக் கண்டான் முன்னே வ8ளத்துக் கட்டு அவிழ்த்துவிட்டு நீ யார்? ஏன் இங்கு வந்தாய்?” என்று கேட்டான். உற்றதையெல்லாம் ஒளியாமல் இவன் உரைத்தான். 'அப்படியானல் மறுபடியும் நேரே போராடி வெற்றி தோல்விகளே ப் பார்க்கலாம் ' என்று வாலி யுரைத்தான். இவன் மறுத்து வேண்டாம் என்று மொழிந்து தோ ழ ைம கொண்டாடினன். அவனும் உரிமையாய் அமைந்தான். அயலே வருவன காணுக. பிஞ்ஞகன் பூசை பேணுதல் வேண்டிப் பெருங்கடல் தொறும்செல விரையும் அந்நிலை யதனில் அரக்கன் நீ வந்த காரியம் அறிந்திலென்; அங்கே வெந்நிடை வந்த காரண மதனே விளம்பு! என இராவணன் விளம்பும்: