பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. இ டன் அ றி த ல் 2655 மையும் பெருங்கொடையும் பெருவீரமும் இவனிடம் Ի ருங்கே நிறைந்திருந்தன. இவன் இளவரசனுயிருக்கும் பொழுது விதர்ப்பதேசத்து .ே வ ங் த ன் மகளாகிய இந்துமதிக்குத் திருமணம் புரிய அரசு முறைப்படி சுயம் வரம் நிகழ்ந்தது. அந்த அதிசய அழகியை மணந்து கொள்ள விழைந்து தேசமன்னர் யாவரும் அங்கே திரண்டு வந்தனர். இந்தக் குலமகனும் போயிருந்தான். அந்த அரச சபையில் வரிசையுடன் அமர்ந்திருந்த வேந்தர் குழு விடையே இவன் விழுமிய கிலேயில் விளங்கி யிருந்தான். குறித்த நேரம் வந்தது; வரவே கையில் நறுமண மாலேயுடன் இந்துமதி வந்து மேடை யில் ஏறி நின்ருள். இளமை ஒளி தவழ எழில் ஒழுக இளைய ஒரு இந்திராணிபோல் நிலவிகின்ற அக்குல மகளைக் கண்டதும் அனைவரும் மனமயலோடு மறுகி யிருந்தனர். அயலே கின்ற தோழி அரசர் யாவரையும் விளக்கிக் கூறினுள். எவரையும் யாதும் மதியாமல் வந்து அந்த அழகி இந்த அழகனுக்கே மாலையைச் சூட்டினுள். எனக்கு எனக்கு என்று மனக்கடுங்காத லோடு மயல்கொண்டிருந்த மன்னரெல்லாரும் பொரு மைமிக்கொண்டு இவளுேடு போருக்கு மூண்டனர். மனைவி மறுகினள். அவளேத் தேற்றித் தந்தையிடம் இருத்திவிட்டு இவ்வீரன் ஒரு வனே தனியேகின்று அனைவரையும் பொருது தொலேத்தான். இவனுடைய வில்லாடல்களேக் கண்டுஎல்லாரும் வியந்து புகழ்ந்தனர். வில் என்னும் நெடுவரையால் வேந்தென்னும் கடல்கலக்கி எல்என்னும் மணிமுறுவல் இந்துமதி எனுந்திருவை அல்என்னும் திருநிறத்த அரிஎன்ன அசன் என்பான் மல் என்னும் திரள் புயத்துக் கணியென்ன வைத்தானே. (இராமா, குலமுறை 12) இந்த வீரனுடைய வினையாண்மையையும் வெற்றித் திறத்தையும் வி ய ங் து சனகமன்னனிடம் கோசிக முனிவர் இவ்வாறு கூறியுள்ளார். திருமால் பாற்கடலேன் கடைந்து இலக்குமியை அடைந்தான் அசன்வேந்தராகிய கடலேக் கலக்கி இந்துமதியை இனிய மனேவியாகக்