பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2656 திருக்குறட் குமரேச வெண்பா கொண்டான் என்று குறித்திருக்கிருர். இதல்ை இவ னுடைய திவ்விய மகிமைகள் தெரிய நின்றன. உரிய மாமனது உறைவிடம் உறுதியாய் வாய்த்தமையால் தன் உள்ளத்திண்மையால் யாதொரு உதவியும் வேண் டாமல் தனியே கின்று பொருதுவென்று வெற்றித் திருவை இவன் பெற்று மகிழ்ந்தான். எஞ்சாமல் எண்ணி இடத்தால் செய்யின் அஞ்சாமை யல்லால் துணை வேண்டா என்பதை இவன் தெளிவா விளக்கி நின்ருன். இவனது சரிதம் இரகுவம்சம் என்னும் வட மொழி நூலில் விரிவாய் விளங்கியுளது. கல்ல இடரிலையை நாடி வினை செய்யின் எல்லாம் இனிதாம் எதிர். ஊக்கமும் இடமும் ஆக்கம் பலதரும். 498 சென்ருன் சராசந்தன் சேனையுடன் பின்பேனே குன்றி யழிந்தான் குமரேசா-என்றும் சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான் ஊக்கம் அழிந்து விடும். (அ) இ-ள். குமரேசா : மிக்க படைகளுடன் சென்றும் சராசந்தன் ஏன் எதிரியால் இழிந்து அழிந்தான் ! எனின், சிறு படையான் செல்இடம் உறுபடையான் சேரின் ஊக்கம் அழிந்து விடும் என்க. சேனேச்செருக்கால் சிறுமை யுருதே என்கின்றது. சிறிய படையுடையானுக்கு உறுதியான வலிய இடத்தில் பெரிய படையுடையான் போராடச் சென் ருல் அவன் உறுதி யிழந்து இழிந்து படுவான். பொருள் படை வலி முதலியன மனிதனுக்கு மமதையை விளேத்துவரும். அந்த உள்ளத் திமிரால் செல்லும் இடம் செல்லா இடங்களே எண்ணிகோக்காமல் வினைகளில் விரைந்து இறங்குவன். அதல்ை இழிவும் பழியும் விளையும் ஆதலால் அவ்வாறு துடுக்காய்ச்