பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45. பெரியாரைத் துணைக் கோடல் 2423 உண்மையான நண்பரின் திண்மையான உரிமை யை இதில் தெளிவாய் உணர்ந்து கொள்கிருேம். இடித்து அறிவுறுத்துவோரே இனிய பெரிய துனேவர். பிள்ளைகளே அடித்துத் திருத்துவர். பெரிய மனிதரை இடித்து அறிவுறுத்துவர். அறிவோர் இடித்துச் சொல்வதைப் பொறுத்துக் கேட்பவனே பொறையுடைய மன்னயைப் அரசுமுறை யில் துறைதோறும் உயர்ந்து வருகிருன். மருந்து முத லில் அருங்தக் கசக்கும். அக் கசப்பைப் பொறுத்து அதனை உட்கொண்டால் நோய் நீங்கிச் சுகமுண்டாம். அதுபோல் பெருந்தகைமையாளர் அறிவுரை முதலில் வெறுப்பாயிருந்தாலும் விரும்பியுட்கொள்ளின் அதனுல் அல்லல்கள் நீங்கி எல்லா நலங்களும் உளவாம். படிபுரக்கும் முடிமன்னர் தனி கிலேயில் உயர்ந்துள் ளனர். ஆகவே செம்மையுறத் தம்மை இடிக்கும் துனே யாரை ஆளா தொழியின் அ.து அவர்க்குக் கொடிய கேடாம். - கடிக்கும்வல் அரவும் கேட்கும் மந்திரம் களிக்கின்றேயை அடுக்குமீ தடாதென்று ஆன்ற ஏதுவோ டறிவு காட்டி இடிக்குநர் இல்லை; உள்ளார் எண்ணிய தெண்ணி யுன்னே முடிக்குநர்; என்றபோது முடிவன்றி முடிவது உண்டோ? o (இராமா, சுந்தர-4-59) தன்னை நச்சி நின்ற இராவணனை நோக்கிச் சீதை இவ்வாறு உள்ளம் கொதித்து எள்ளியிகழ்ந்துள்ளாள். இடிக்குநர் இல்லை என்றது. பெரியாரைத் துணேக்கொள் ளாமல் வெறிகொண்டு நிற்கின்ற அவனது வி ப ரீ த நிலையை வெறுத்து வந்தது. இந்தக் கற்பரசியின் அற்புத மனவுறுதியும் ம தி ந ல னு ம் விதிமுறைகளே விளக்கும் திறனும் ஈண்டு வெளியாயுள்ளன. புல்லறிவு அகற்றி நல்லறிவு கொளி.இ எம்ம ைேரையும் இடித்துவரை நிறுத்திச் செம்மைசெய் தருளத் திருவுருக் கொண்ட