பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. இ ட ன் அ றி த ல் 2657 செல்லலாகாது; சென்ருல் அல்லலேயாம் என்று தேவர் இவ்வாறு இட நிலைமையைத் தெளிவுறுத்தி யுள்ளார். படை என்னும் சொல் வேல் வாள் வில் முதலிய ஆயுத வகைகளையும், தேர் யானே குதிரை காலாள் முதலிய சேனை வகைகளேயும் குறித்துவரும். படுப்பது படை என வந்தது. படுத்தல்= சிதைத்தல்: வதைத்தல். சிறுபடையான் = சிறிய சேனையை யுடையவன்.சிறுமை அளவின்மேல் நின்றது. செல் இடம் என்றது, தனது அதிகாரம் தடையின்றி நடைபெறுகின்ற பக்கத்தை. ஒருவனது காரியம் இடையூறின்றி இனிது நடைபெறின் அக்காலத்தை அவனுக்குச் செல்காலம் என்பர். அது போல் தனக்கு வலிமையுள்ள நிலம் செல்இடம் என வந்தது. செல்லும் இடத்தில் இருப்பவனே வெல்லும் படி வருபவன் அல்லலுழந்து படுவான். உறுபடை என்றது மிகுந்த சேனையை. அளவிலும் வலியிலும் பெரியது என்பதாம். உறு என்னும் உரிச் சொல் மிகுதியை உணர்த்திவரும். மிக்க படையுடை யேம் என்று களித்துத் தக்க இடம் அறியாது தருக்கிச் சென்ருல் அவன் ஒக்க அழிந்து கெடுவான். தன் பால் படைவலி குறைந்திருந்தாலும் தனக்கு இடவலி நன்கு அமைந்திருந்தால் அவன் பெரும் படை களையுடைய பேரரசனேயும் ஒருங்கே வென்றுவிடுவான். உறுபடை மன்னர் தம்மை யுடற்றி ஒன் ருனு மின் றிச் - சிறுபடை யவர்கள் வென்று செகுப்பவோ? என்ன வேண்டா செறிஎயிற்று ஆளி வேழப் பேரினஞ் செகுத்த தன்றே உறுபுலி ஒன்று தானே கலேயினம் உடற்றிற் றன்றே. (சீவக சிந்தாமணி 814) சிறுபடையாளர் உறுபடையாளரை வென்று தொலைப் பர் என்று இது உறுதி கூறியுள்ளது. தேவர் வாய் மொழிகள் இதில் மேவி யுள்ளன. த ன க் கு உற்ற இடத்தில் உறுதியாய் நிற்பவன் யாளி போலவும், புலி போலவும் வலிமை பெற்று நிற்கின்ருன். நிலைமை தெரி யாமல் அவன்மேல் போருக்கு வருபவர் கிலே குலேந்து போகின்ருர் என்பதை இங்கே உணர்ந்து கொள் கிருேம். 333