பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. இ ட ன் அ றி த ல் 2667 இழைபொறை ஆற்ற கில்லா திட்டிடை தளர நின்ற குழைநிற முகத்தி ர்ைபோல் குறித்ததே துணிந்து செய்யார்; முழையுறை சிங்கம்பொங்கி முழங்கிமேல் பாய்ந்து மைதோய் வமையுறை வனத்து வன்கண் நரிவலைப் பட்ட தன்றே. (சீவக சிந்தாமணி 1928) இடத்தின் அபாயத்தை எண்ணி நோக்காமல் இறு மாங்து முண்டு சென்ற சிங்கம் நரியின் சூழ்ச்சியில் அகப்பட்டு மாண் து: அதுபோல் அரசர் உரிய கிலக ஆப் து பாராமல் சென்ருல் இழிந்தவராலும் அழிந்து படமே வர் என இது குறித்துள்ளது. இடம் அறியாது போனல் பெரிய மதயானையும் சிறிய மரியால் கொல்லப்படும் என்பதை முன்பு அறிந் கொம் அரிய திறலுடைய சிங்கமும் மெலிய நரியால் மாய்ந்து படும் என்பதை இதில் அறிந்து கொள்கிருேம். உ8ளயச் சிலைக்கும் உழுவையும் தான்தன் அளே யில்,நீர்ந்து ஊரடைந்த தாக-இனிவந்து உயிரிழப்ப தென்ருல் உறுமிடநீத் தென்கொல் செயிருழக்கும் தீங்கு செயல். (பாரதம்) தனது இடமாகிய வனத்தை விட்டு ஊருள் புகுந் தால் வலிய புலியும் துயருழந்து உயிரிழக்கும்; ஆகவே உரிய இடத்தைப் பேணி ஒழுகுவோரே பெருமையுடன் வாழ்வார்: பேணுது போனல் பிழையாய்ச் சாவர் என இது நிலைமையை நேரே உணர்த்தியுளது. i. ஆண்யானை சிங்க ஏறு புலிப் போத்து ஆகிய மூன்றும் இங்கே பார்வைக்கு வந்துள்ளன. அருந்திற லுடைய இவை இடங்தெரியாமல் புகுந்தமையால் மடம் படிந்து திடம் அழிந்து திறல் ஒழிந்து மாண்டன. இவற். றைக் கண்டு தெளிந்தாவது வேந்தர் இடம் தேர்ந்து வினைபுரிந்து உ ய ர் ந் து கொள்ள வேண்டும். சிங்க ஏறுபோல் சிறந்த வீரம் உடையவனுயினும் இடம் அல்லாத இடத்தில் புகுந்தால் எவரும் இடர் செய்ய நேர்வர்: ஆகவே தானம் தவறினல் மானவீரம் வாய்ந்த பெரிய மன்னரும் இன்னலுழந்து வருந்துவர்.