பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26.68 திருக்குறட் குமரேச வெண்பா அரிமா வளைந்த நரிமாப் போல இகல்முனே வேட்டுவர் இடுக்கண் செய்யப் புகைமிகு வெவ்அழல் பூம்பொழில் புதைப்பக் கான வெந்தீக் கடும்புகைப் பட்ட மான் அமர் பிணேயின் மம்மர் எய்தித் த8ளயவிழ் தாரோன் தனிமைக்கு இரங்கிக் களே கண் காணுது கையறு துயரமொடு பெய்வளைத் தோளி வெய்துயிர்த்து ஏங்க. (பெருங்கதை 1-56) உறுதி மிகவுடைய உதயணமன்னன் தனியே ஒரு காட்டுள் போகும்பொழுது அங்குள்ள வேடர்கள் அவனே வளைந்துகொண்டு அல்லல் விளேத்துள்ளதை இதனுல் அறிந்து கொள்கிருேம். அரிமா வளைந்த கரிமா என்றது வேந்தனேயும் வேடர்களேயும் முறையே ஒர்ந்து கொள்ள வந்தது. அரிமா = சிங்க ஏறு. சிங்கம் அனேய திறலுடையவரும் இடவலியை இழந்துவிடின் நரிகள் போன்ற சிறியவர்க ளாலும் பங்கம் அடைவர் என்பது இங்கு நன்கு தெரிய வந்தது. புலியும் ஊருள்வரின் பூனேயாய் ஊறுபடும். அரிய பெரிய வலிமைகள் அமைந்திருந்தாலும் உரிய இடன் அறிந்து ஒழுகிவரும் அளவே அவை: பெருமை அடைந்துவரும்: அறியாது வழுவின் பரிதாப மாய் அழிய நேர்வீர்! என அரசரை கோக்கி இங்ங்னம் தெளிய உணர்த்தி யுள்ளார். நேரே வெளிப்படையாக உரையாமல் குறிப்பாகச் சொல்லி யிருத்தலால் நுவலா நுவற்சி என்னும் அலங் காரம் இதில் அமைந்துள்ளது. கருதிய பொருளே அழகுற மொழிவது அணி என வந்தது. ஏலா இடம் தோல்வியாம்; ஏலும் இடம் வெற்றியாம். இவ்வுண்மையை உத்தரன் விளக்கி கின்ருன். சரி தம். இவன் மச்சநாட்டு மன்னனாகிய விராடன் புதல்வன். அழகும் அறிவும் உடையயிைனும் உளவுறுதியில்லாத