பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. இ ட ன் அ றி த ல் 267 I வில் வேல் முதலிய ஆயுதங்களேயும் உயர்ந்த மணியணி களேயும் வெற்றி விருதுகளேயும் கவர்ந்து கொண்டு வந்தான். அரிய பெரிய மதயானேயும் சேற்று நிலத் தில் விழுந்து அழுந்திக் கிடந்தால் அதனே கரியும் கொல்லும் என்பதை இவன் செயல் அன்று நன்கு விளக்கி நின்றது. வலிஅறிதல், இடம் அறிதல், காலம் ஒர்தல், மாற்றலர்தம் நிலைமையெலாம் வரைந்து தேர்தல், பொலிவுறுதன் படைவலியும் தானே வேந்தர் பொருந்தியுள திடநிலையும் புலனும் நாடி மெலிவுறுதல் எவ்வகையும் மேவா வண்ணம் வேண்டியன யாவுமே விரைந்து கொண்டு வெலும்வகையில் படை எழுச்சி செய்யும் வேந்தன் வெற்றி மிகப் பெற்றுலகில் விளங்கு மன்றே. ஏற்றஇடம் வாய்த்தால் எலியும் புலியினை ஆற்றல் அழிக்கும் அடர்ந்து. இயலா இடத்து முயலாதே. இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. உரிய இடம் கண்டு உற்றவினே தொடங்கு. அரண் உரமாய் ஆக்கம் பலவும் தரும். அதல்ை ஆற்றல்கள் உளவாம். மாற்ருரும் மடங்கி யடங்குவர். ஏற்ற இடமே எவர்க்கும் வலிமையாம். மாறுபட்ட இடத்தில் வலிமை இழந்து படும். இடம் எண்ணிச் செய்தால் திடம் கண்ணி வரும். இடவலி.முன் எதிரியின் படைவலி பாழாம். தன்னிலமே தனக்கு வன்மையாம். இடநலம் இலதேல் எங்கலமும் பழுதாம். 50-வது இடன் அறிதல் முற்றிற்று.

==

I