பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 .ெ த ரி க் து .ெ த எரி த ல் 2675 தேவர் நான்கு கூறினர்; அருளேச் சேர்த்து இவர் ஐந்து _றி யுள்ளார். பொருள்கள் சிந்தனைக்கு உரியன. திறம்தெரிந்து தேறப் படும் என்று அவர் பொதுவாக வுரைத்தார். வேந்தல்ை தேறப்படும் குணத்தின்ை என்று சிறப்பாக விரித்து இப்பாவில் இவர் உரைத் திருக்கிருர். உரைக் குறிப்புகளே உய்த்து உணர்க. கூர்வேல் வல் என்று வேந்தனே விசேடித்தது. அவனது வீரமும் வெற்றியும் இத்தகைய காரிய நிபுணர் களைக் கருதித் தெளிந்து உரிமையாத் தழுவிக் கொள்வ திலேயே மருமமாய் மருவியுள்ளன என்பது தெரிய. பாபி, வறியன், நோயன், கோழை என இவ்வாறு பிழை படிந்துள்ள வன் வினே யாளன் ஆகான் என்பது எதிர்மறையால் இங்கே இனிது தெரிய வந்தது. இக்குறளுக்கு வேறு பொருள் கூறினரும் உளர் : இந்த அரசன் அறநெறி நில்லாதவன், பொருள் ஈயாத உலோபி, கடுங்காமி, உயிர்களே அச்சுறுத்தும் கொடியவன் எனத் தன்னேக் குறித்து மன்னன் மாறு பாடுடன் ஒருவனிடம் மருமமாய் உரைத்து விடுத்து அவ்வுரைகளேக் கே ட் டு அவ்வினையாளன் மனகிலே திரிவாளுகில் அவனைச் சேர்க்கலாது; திரியாமல் உறுதி யாய் உறவுடன் நின்ருல் அவனே சேர்த்துக்கொள்ளலாம் என்று இங்ங்னம் அவர் வார்த்து வரைந்திருக்கிருர், காமந்தகம் என்னும் ஆரிய நூலில் காரிய விசா ர8ணயாளரைத் தெரிந்தெடுக்கும் உபாயங்கள் சில குறிக்கப்பட்டுள்ளன. அதற்கு உபதா என்று பேர். அதைப் பின்பற்றி அவர் இவ்வாறு உரைக்க நேர்ந் துள்ளார் என்று குறிப்பால் தெரிகின்றது. புதிதாய் வந்த ஆளேத் திறந்தெரிந்து தெளிந்து கொள்வதையே ஈண்டு அறிய வந்துள்ளோம். பழமை யாய் அரசனிடம் படிந்துள்ளவனைச் சோதிக்க இங்கே தேவையில்லை. சோதனை செய்ய நேர்ந்துள்ள இந்த நிலைமைகளே ஈண்டுக் கூர்ந்து ஒர்ந்து கொள்ளவேண்டும்.