பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51. தெரி க் து தெளி தல் 2687 There is a foolish corner even in the brain of the sage. (Aristotle) தெளிந்த ஞானியின் அறிவிலும் அறியாமை சிறிது உள்ளே ஒளிந்திருக்கும் என அரிஸ்டாட்டல் என்னும் கிரேக்க தேசத்து அறிஞர் இவ்வாறு கூறியிருக்கிருர், மதியுள்ளும் ஒர்மறு வுண்டு; மதியின் அதிபதி என்றே அகங்கொள்-விதியுமுன் செவ்வேள ல் உண்மை தெளிந்தான்; அறிவுநிலை எவ்வள வென் றெண்ணி யினைந்து. இதன் பொருளே எண்ணி ஒர்ந்து சிந்திக்கவேண்டும். அரிய வேதங்கள் யாவும் ஒதியுணர்ந்து எல்லாம். தெளிந்த மேதாவி என யாண்டும் நீண்ட புகழுடன் நிலவியுள்ள அதிசய மேதையிடமும் பேதைமை சிறிது உள்ளே மேவியிருக்கும். இவ்வுண்மை பிரமாவின்கண் உணரவுந்தது. ச ரி த ம் அகிலவுலகங்களேயும் படைத்தருளும் தலைமையில் பிரமதேவன் என்றும் நிலவியுள்ளார். வேதம் முதலிய கலைகளேயெல்லாம் நன்கு தெளிந்தவர். வரன், பிதா, வேதா, போதன் முதலிய காரணப் பெயர்கள் இவரு டைய பேரறிவையும் பேராற்றல்களேயும் பெருமித கிலேகளேயும் பூரணமா விளக்கிக்கொண் டிருக்கின்றன. கலைகளின் அதிதேவதையான ச ர சு வ தி தேவிக்கு நாயகன். இத்தகைய மேதை சிவபெருமானே ஒருமுறை தரிசிக்க விரும்பிச் சென்ருர். கைலாசவாசனைக் கண்டு வணங்கி உரையாடி மகிழ்ந்து மீண்டு வெளியே வந்தார். வருங்கால் அங்கே இளமைக் கோலமாய் எழிலொனி வீசிமிளிர முருகப்பெருமான் உல்லாச வினுேதமாய் முன் மாளிகையில் அமர்ந்திருந்தார். இளைஞர் என்று. எண்ணி யாதும் கவனியாமல் இவர் இறுமாந்து சென் ருர். இவரது மமதை கிலேயை அறிந்த குமரப் பெரு மான் ' கமலப்புத்தேளே ! இங்கு வருக ' என்று: அழைத்தார். இவர் அருகே போய் கின்ருர்: அவர்