பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51. தெரிந்து தெளி தல் 2689 மையால் மயங்கினன். மனிதராகிய நாம் அறிவுடை யேம் என்று மதத்துச் செருக்குவது மடமையாம் என இச்சரிதம் உறுதியாய் அறிவுறுத்தி யுள்ளது. அரிய கற்று ஆசு அற்ருர் கண்ணும் அறியாமை புகுந்திருக்கும் என்பதை அதிசய மேதையான பிரம தேவனும் பேருலங்கள் அறிய நேரே விளக்கி நின் ருன். தெளிந்தஅறி வுள்ளும் தெளியா மடமை ஒளிந்துள் இருக்கும் உறைந்து. மதியுள்ளும் மறுவுண்டு. 504 குற்றம் சேர் கள்ளுண் குரங்கரசை ஏன்கொண்டான் கொற்ற இராமன் குமரேசா-உற்ற குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல். (ச) இ-ள். குமரேசா : குடி காரய்ைக் குற்றமுற்றுள்ள சுக்கிரி வ&ன ஏன் இராமன் உறவுரிமையாக் கூடிக் கொண்டான்? எனின், குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் என்க. குணம் குற்றங்களேச் சீர்துரக்கி நோக்கி அவற் றுள்ளே மிக்க நிலைகளே ஆர்ாய்ந்து மிகுதியைக்கொண்டு ஒருவன் தகுதியைத் தேர்ந்து தெளிந்து கொள்ளுக. குணம் மனிதனே மணமா உயர்த்தி மாண்புறுத்து கிறது. குற்றம் அவனேக் குறையாத் தாழ்த்தி வீழ்த்தி எவ்வழியும் குறுகச் செய்கிறது. கல்வி கல்லாமை, அறிவு அறியாமை, புகழ் இகழ், புண்ணியம் பாவம், பெருமை சிறுமை, நன்மை தீமை, குணம் குற்றம் என இன்னவாருன இரட்டைகள் மனித இனத்தை யாண்டும் இனமாப் பற்றி வருகின்றன. ஒன்றைவிட்டு ஒன்று பிரியாமல் இருப்பது அதன் அதன் பிறப்பு உரிமையாய்த் தொடர்ந்து பெருகி வந்துளது. 337