பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2690 திருக்குறட் குமரேச வெண்பா இயன்ற வரையும் முயன்று நல்லதைப் பழகி வருப வன் நல்லவனப் உயர்ந்து கொள்கிருன்; அவ்வாறு பழ காதவன் அல்லலான வழியில் தாழ்ந்து கிற்கின்ருன். அன்பு அடக்கம் அமைதி சீலம் கருணே சத்தியம் முதலியன குணநலன்களாய் ஒளிபெற்றுள்ளன: இவற். றைத் தழுவி ஒழுகி வருபவர் விழுமிய மேலோசாப் உயர்ந்து யாண்டும் விளங்கி வருகின்றனர். செருக்கு சினம் துடுக்கு பொய் கொடுமை மடமை இழிநசை முதலியன குற்றங்களாய்ப் பெருகியுள்ளன. இவற்றை மருவி நிற்பவர் இழிந்த மாக்களாய்க் கழிந்து கிற்கின்றனர். சார்ந்த நிலைகளின் அளவே எவரும் நேர்ந்து எங்கும் தேர்ந்து திகழ்கின்றனர். குற்றம் யாதும் இன்றி முழுதும் குணமே உடை யாரும், குணம் சிறிதும் இல்லாமல் குற்றமே யுடை யாரும் இவ்வுலகில் யாரும் இலர். ஆகவே குணத்தை யும் குற்றத்தையும் கூர்ந்து ஆராய்ந்து குணம் குறைந்து குற்றம் கூடியிருந்தால் அவரைக் கூடாமல் தள்ளிவிட வேண்டும்; குற்றம் குறைந்து குணம் நிறைந்திருந்தால் அவரைத் தனக்கு உ ரி ைம தி துணேயாக அரசன் தெளிந்து கொள்ளலாம் என்பது இங்கே கருமச் சூழ்ச்சி யாய் நன்கு அறிந்து கொள்ள வந்தது. குற்றம் இல்லாத குணசீலர்களே வேண்டும் என்று விழ்ைந்து தேடி யாண்டும் நீண்டு அலேந்தால் ஈண்டு ஒருவரும் உரிமையாய்க் கிடைக்க மாட்டார். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லே. குற்றத்தைக் கூர்ந்து பார்க்க நேர்ந்தால் ஒருவரை யும் உறவாக இவ்வுலகில் அடைய முடியாது என்று ஒளவையார் இவ்வாறு உறுதி கூறியிருக்கின்ருர். நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை அல்லார் எனினும் அடக்கிக் கொளல்வேண்டும்; நெல்லுக் குமியுண்டு நீர்க்கு நுரையுண்டு புல்லிதழ் பூவிற்கும் உண்டு. (நாலடி(221)