பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2694 திருக்குறட் குமரேச வெண்பா யோம். முற்றும் குற்றம் இல்லாதவரை யாண்டும் காண்டல் அரிது. அமைந்த அளவு அமைதியுறவேண் டும் என்று தமையன் கூறவே தம்பி அடங்கி கின்ருன். கவை அற்ருர் என்றலுக்கு ஆகுகர் யார் ? என்ற கேள்வி எவரும் இலர் என்பதை விளக்கி நின்றது. குணம் காடிக் குற்றமும் நா டி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல் வேண்டும் என்பதைக் குறிக்கொண்டு அக்கோ மகன் சுக்கிரீவனத் துணிக்கொண்டிருக்கின்ருன். அவ்: வுண்மையை ஈண்டு நாம் உணர்ந்து கொள்கின்ருேம். குற்றம் குறைந்து குணங்றைக் துள்ளவனே உற்றதுணை யாக்கொள் உணர்ந்து. ஆனவரையும் நல்லவனே ஆய்ந்து சேர். --- ( 50.5 சார்ந்த தருமகுத்தன் சானகனேன் தம்செயலால் கூர்ந்தறிய நின்ருர் குமரேசா-ஆர்ந்த பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல். (டு) இ-ள். குமரேசா தருமகுத்தனும் சானகனும் தம் செயல் களால் ஏன் உயர்வு தாழ்வுகளே உலகம் அறிய கின் றனர் ? எனின், பெருமைக்கும் ஏனேச் சிறுமைக்கும் தம் தம் கருமமே கட்டளேக் கல் என்க. செயலே மனிதன் இயல்பை அயலே காட்டுகிறது. பெரிய தகைமைக்கும் மற்றைச் சிறிய வகைமைக் கும் அவரவருடைய செயல்களே அளவு கருவியாய் மனிதரிடம் அமைந்து கிற்கின்றன. கட்டளேக் கல் = அளவு: நிறையறிக்ருவி, உரைகல். ஒத்த பிறப்புடைய மக்கள் இடையே உயர்ந்தவர் தாழ்ந்தவர், மேலோர் கீழோர், பெரியோர் சிறியோர், மேதையர் பேதையர், என இன்னவாறு பல வகை களில் பிரித்துப் பேசப்பட்டு வருகின்றனர்.