பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51. தெரி ந் து தெளி த ல் 2697 பொற்கலத் துாட்டிப் புறந்தரினும் நாய்பிறர் எச்சிற் கிமையாது பார்த்திருக்கும்-அச்சீர் பெருமை யுடை த்தாக் கொளினும்கீழ் செய்யும் கருமங்கள் வேறு படும். (நாலடி 345) o பொன் கலத்தில் நல்ல உணவுகள் ஊட்டி நாயைப் போற்றி வரினும் அது பிறர் எச்சிலை நச்சி நக்க ஓடும்; சிறியரைப் பெருமைப் படுத்தி அ ர ச காரியங்களில் அமர்த்திக் கொண்டாலும் அவர் இழிநசையாளராய் ஈனவழிகளிலேயே இ ழி ங் து உழலுவர் என இது உணர்த்தியுளது, பெருமையாக் கொளினும் கீழ் செய்யும் கருமங்கள் வேறுபடும் என்பது இங்கே கருதி யுணர வுரியது. கீழான சிறியரை மேலோர் சேர லாகாது. செய்யும் செயல்களே மனிதரை வையம் அறிய விளக்கி விடுகின்றன. தருமகுத்தனும் சானகனும் மரும மாய் இருப்பினும் தம் கருமங்களால் காண நேர்ந்தனர். ச ரி தம். தருமகுத்தன் என்பவன் சந்திரகுல வேந்தகிைய கந்தன் மைந்தன். நல்ல தன்மைகள் இல்லாதவன். உருவ அழகு பெருகியிருந்தும் இவனிடம் உணர்வொளி அருகி யிருந்தது. புலனுகர்வுகளில் ஒடித் தன்னலமே நாடி நயவஞ்சகனப் இவன் நீடி யிருந்தான். உற்ற துணேவர்க ளோடு கூடி ஒருநாள் இவன் வேட்டைக்குப் போன்ை. காட்டில் நீண்ட துரம் போனமையால் இடையே துணே வரைப் பிரிங்தான்: த ய ங் கி த் திரிந்தான். பகல் மறைந்தது; இரவு வந்தது; வரவே அங்கு ஒர் ஆல மரத்தை அடைந்தான். புலி முதலிய கொடிய மிருகங் களுக்கு அஞ்சி அதில் ஏறி ஒரு பெரிய கிளே யில் தங்கி யிருந்தான். சிறிது நேரத்தில் ஒரு வேடன் ஒடி வந்து அந்த மரத்தில் ஏறினன். கரடி முகமும் மனித உருவ மும் உடையவன்; சானகன் என்னும் பேரினன். பெரிய சிங்கம் ஒன்று தன்னைக்கொல்லவந்தமையால் அதற்குத் தப்பி அங்கே வந்து அவன் தங்க நேர்ந்தான். அவனேக் கண்டதும் இவன் அஞ்சி நடுங்கினன். ' அஞ்சாதே ! 338