பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2428 திருக்குறட் குமரேச வெண்பா இடிப்பார் என்றது தரும நீதிகளே நன்கு தெரிந்த பெரியோர்களே. அவர்களே அரசனுக்கு இடித்து அறிவு கூற வல்லவர். அத்தகைய மேலோரை மதித்து உப சரித்து மன்னன் எவ்வழியும் இனிது பேணிக்கொள்ள வேண்டும்; அவ்வாறு பேணவில்லையானுல் அவர் பிரிய நேர்வர்; பிரிந்தால் வேலியில்லாத பயிர்போல் அவன் வாழ்வு விரைந்து பாழ்படும். மன்னன் கெடும் என அஃறிணே வாய்பாட்டால் முடித்தது ஏன்? எனின், பெரியோர் துணையை இழந்த பொழுதே அவன் இழிந்து கழிந்தமை தெரிய. ஏமரா=காவலற்ற களிப்புறுகின்ற. ஏமரல் என்னும் வினேயடியாக இது பிறந்துள்ளது. ஏமரல்=காத்தல்; களித்தல்: மயங்கல்: மருளல். ஏமராது ஏமராவாறு. (கலி, 145 ) இதில் ஏமரா குறித்திருத்தலேக் கூர்ந்து கானுக. இடிப்பாரை இல்லாத, களிப்புறுகின்ற மன்னன் என்று பொருள் கொண்டால் புறத்தும் அகத்தும் புசை யோடியுள்ள புலேகிலேகள் தெரிய வரும். உறுதி நலன் களே வலியுறுத்திக் கூறும் நல்ல துணேவர் அருகே இல்லையாயினும் ஏமாலுருத மன்னன் கேடு அடையான். யானேயை அங்குசத்தால் இடித்து அடக்கி கடத்தும் பாகன் வெளியே நில்லாது ஒழியினும் உள்ளே மதக் க ளி ப் பு இல்லையாயின் அந்த யானே அல்லலுருது வாழும். அதுபோல் புறத்தே உசத்தோடு இடிப்பார் இல்லாது போயினும் அகத்தே ஏமாப்புக் கொள்ளச ஞயின் அவன் கேடுருது இனிது வாழ்வான். ஏமுற்றவரினும் ஏழை. (குறள், 873) இதனே இங்கே நன்கு கருதி யுணர்க. உறுதி கூறுவாரும் இல்லாமல், உள்ளத்தருக்கும் கூடினுல் அந்த மன்னன் எ ள் ளல டை ங் து அல்லல் உழந்து இழிந்து விரைந்து கெடுள்ன்.