பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51. தெ ரிங் து தெளி த ல் 2707 பிழையான தெளிவு பீழையாம் என்கிறது. அயலானே ஆராயாமல் தெளிந்த அரசன் தனது _சக்ததிகட்கு நீங்காத துன்பங்களேத் தந்தவனாவான். பிறன் என்றது புதிதாய் வேலைக்கு வந்தவனே. தனது மரபு உறவு பழக்கங்களில் இல்லாத ஒருவன் அரச காரியங்களே ஆற்றுவதாக வரின் அவனே அரசன் மிகவும் கவனித்து ஆராயவேண்டும்; அவனது பிறப்பு இருப்பு பயிற்சி குணம் முதலியவைகளேக் கூர்ந்து விசாரித்துப் பலவகையிலும் ஆ ப் ங் து நல்லவன ? அல்லவன? என்று கூர்ந்து தேர்ந்து தெளிய வேண்டும்: தெளியாமல் எதையும் செய்யலாகாது. தேரான் = ஆராயாமல்; எதிர்மறை முற்று எச்ச மாய் நின்றது. தேர்பவனே தெளிய வுரியவனகிருன். தேர்தலும் தெளிதலும் நல்ல அறிவின் பலன்கள்: அவை வழுவின்றி வரின் எவ்வழியும் நன்மையாம்; வழு வுறநேரின் யாண்டும் தீமையாய் நீண்டு வரும். தேரா மையும் தெளியாமையும் அரசனுக்கு இழிவாம் ஆதலால் தேர்ந்து தெளிதல், அவனுடைய குலமுறைகளுள் தலைமையான கடமையாய் நன்கு மருவியுளது. தன்னே நாடிவந்த விபீடணனே இராமன் உடனே சேர்த்துக் கொள்ளவில்லை; பலவும் கூர்ந்து சிந்தித்தான்: சுக்கிரீவன் சாம்பவன் நீல்ன் அனுமான் முதலிய மதி மான்களோடு உசாவி ஒர்ந்து ஆராய்ந்தான். அவரவ ருடைய கருத்துக்களைத் தெளிவா எடுத்து உரைத்தனர். தெரிந்து தெளிதல் என்னும் இந்த அதிகாரம் முழு வதுக்கும் ஒரு சிறந்த விரிவுரைபோல் அவை விரிந்து வந்துள்ளன. இறுதியில் மாருதி கூறியவற்றுள் ஒரு சிறு பகுதியை மட்டும் அயலே காண வருகின்ருேம். அனுமன் அறிவுரை. வண்டுளர் அலங்கலாய் ! வஞ்சர் வாள்முகம் கண்டதோர் பொழுதினில் தெரியும்; கைதவம் உண்டெனின் அஃதவர்க்கு ஒளிக்க ஒண்னுமோ ? விண் உவர் பலபகல் மருவி வீழ்வரோ? (1)