பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 12 திருக்குறட் குமரேச வெண்பா முதலில் ஆளே நன்கு தேர்ந்து தெளிந்துகொள் பின்பு அவன் செய்யவுரிய கருமத்தைக் கருதியுணர்ந்து உரிமையுடன் அவனிடம் நேரே உதவி விடுக. உற்ற ஆ8ளயும், உரிய ஆள்வினேயையும் சரியாகத் தேர்ந்து கொளின் அந்த அர சு. எந்த வகையிலும் சிறந்து எவ்வழியும் உயர்ந்து விளங்கி வரும். தக்க கருமத் துண்ைகள் அமையின் அவை மிக்க தருமத் துணைகளாய் ஆட்சிக்கு மாட்சி புரிந்து வரும். மறந்தானும் தாம்உடைய தாம்போற்றின் அல்லால் சிறந்தார் தமர் என்று தேற்றர்கை வையார்; கறங்குநீர் கல்அலேக்கும் கானலம் சேர்ப்ப ! இறந்தது பேர்த்தறிவார் இல். (பழமொழி 43) தெளிவாகத் தேர்ந்து கொள்ளாதவரிடம் தமது உடைமையை வைக்கலாகாதுஎன இதுஉணர்த்தியுளது. தக்கவரைத் தேர்ந்து தகுதியான வினேகளே ஒர்ந்து கடத்துபவன் வேந்தருள் வேங்தனப் விளங்கி வருவன். இது பிரமதத்தன் பால் தெரிய வந்தது. ச ரி தம். இவன் பாஞ்சால தேசத்து வேந்தன். நல்ல குண நீர்மைகள் உடையவன். அரிய பல கலேகளே நன்கு பயின்று தெளிந்தவன். பறவை விலங்கு ஊர்வன நீர் வாழ்வன முதலிய பிராணிகளின் இயல்புகளே உயர் வாயுணர்ந்தவன். உலக நிலைகளேயும் உயிர்பரங்களின் உறவுரிமைகளையும் உணர்ந்து தெளிந்து உறுதி கலன் களைக் கருதி வந்தவன். பெருந்திருவுடையன யிருந்தும் யாவும் துறந்த து ற வி. க ளே யு ம் முனிவர்களேயும் தொழுது வணங்கி அவருடைய அருள் மொழிகளைக் கேட்டுத் தெருள் மிகுந்து தெளிந்து சிறந்து கின்ருன். மனத்தினில் பாவமே வைத்து மாண்பினர் எனத்தவம் இயற்றுவோர் இழைத்த மாதவம் தினத்துணை யாயினும் பலத்தைச் சேர்ந்திடா வினைக்கொடு நிரயத்தில் வீழ்த்தும் என்பரால்.