பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45. பெரியாரைத் துனைக் கோடல் 2429 நட்பாய் இடிப்பார் இன்மை பகையாய்க் கெடுப் பார் கேட்டுக்கும், தானே களித்து மூர்க்கமாய் கிற்றல், கெடுப்பார் இல்லாமலே கெடுதற்கும் ஏதுவாம். ஒருவன் அடைகிற இன்பங்களுக்கும் துன்பங்களுக்கும் அவனு டைய செயல் இயல்களே காரணங்களாம். கல்வினே களால் சுகமும், ஆக்கமும் உளவாகின்றன: தீவினை களால் துக்கமும், கேடும் வருகின்றன. இந்த உண்மை யைத் தெளிவாகத் தெரிந்தவர்கள் மதிநலமுடைய பெரி யோர்கள் ஆதலால் அவர் பரிவுடன் அரசனுக்கு உறுதி களே இதமாக மொழிகின்றனர்: அந்த அறிவுரைகளே விழைந்து கொள்ளாமல் செல்வச் செருக்கால் அவன் களித்து கிற்க நேர்ந்தால் இடித்து அறிவுறுத்துகின்ருர், இடிப்பார் என்ற தல்ை அவர் நடிப்பவர் அல்லர் என்பது தெளிவாய் நின்றது. தக்காருடைய தகவுரைகள் விலக நேரின் மிக்க கேடுகள் விரைவில் விளேய நேரும். நட்புப் பிரித்தல் பகைநட்டல் ஒற்றிகழ்தல் பக்கத்தார் யாரையும் ஐயுறுதல்-தக்கார் நெடுமொழி கோறல் குனம்பிரி தாதல் கெடுவது காட்டும் குறி. (நீதிநெறி, 35) அரசனுக்கு வருகிற கேடுகளே இது வரைந்து காட்டி யுளது. மேலோர் கூறும் உறுதிமொழிகளைப் பொறுதி யோடு கொள்ளா தொழியின் அவன் ஒல்லேயில் கெடு வான் என்னும் இது ஈண்டு எண்ணி உணர வுரியது. அருங்திறலாண்மையும், அ. தி ச ய ஆற்றலும், நெடிய படை வலிமைகளும் உடையன யிருந்தும், மதி நலமுடைய முதியோரின் அறிவுரைகளேக் கேளாமை யால் அரிய பெரிய செல்வங்களே எல்லாம் அடியோடு இழந்து இராவணன் அழிந்து ஒழிந்தான். முதல்நாள் போரில் இராமைேடு மூண்டு பொருது தோல்வியடைந்து மீண்டு வந்து அரண்மனை புகுந்து தனியே அமர்ந்து நேர்ந்த நிலைகளேயும் கொலேகளேயும் நினேந்து கினேந்து நெஞ்சம் உளேங்து நெடுந்துயருழங் தான். அவனது பரிதாப நிலையை அறிந்து வருந்திய