பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 18 திருக்குறட் குமரேச வெண்பா பாண்டி நாட்டின் வளம், மதுரையம்பதியின் மாண்பு, இங்கே கோயில்கொண்டு எழுந்தருளியிருக் கும் சோமசுந்தரப் பெருமானுடைய திவ்விய மகிமைகள் கலையின் துறைகள் இக்கவியில் கனிந்து சுரங்திருக் கின்றன. கருதிக் காணுங்கள் : அறிவின் சுவைகள் அதிசய இன்பங்களாம். தேர்ந்து தெளிந்தவன்பால் அரசன் ஐயுறவுறின் அது வெய்ய துயரமாய் வரும். இவ்வுண்மை அசுவத்தாமன்பால் அறிய வந்தது.

  • ச ரி தம்.

இவன் துரோணுச்சாரியுடைய அருமைத் திருமகன். அரிய பெரிய ஆற்றல்கள் உடையவன். அதிசய வில் வீரன். குருகுல வீரர்களுள் பலவகையிலும் இவன் தலே சிறந்து விளங்கி நின்ருன். பாரதப்போர் மூண்டால் தன் படைகளுக்கு இவனைத் தலைவனுக்க வேண்டும் என்று துரி யோ தன ன் துணிந்திருந்தான. இவன் சேனதிபதியாய் நின்ருல் பாண்டவர் வெல்வது அரிது என்று கண்ணன் கருதினான்: எவ்வண்ணமாவது இவ இனப் பேதித்துப் பிரித்து விடவேண்டும் என்று குறித் திருந்தான். பாண்டவர்க்குத் துதுவய்ை வந்து துரி யோதனன் எதிரே யாவும் பேசி, முடிந்தபின் அரசவை யைவிட்டு மாயன் வெளியே வங்தான். அவ்வாறு வருங் கால் அங்கேயிருந்த அசுவத்தாமனேக் கண்சாடைகாட்டி அழைத்தான்; அவனும் வெளியே வந்து கின்ருன். "நான் வந்த காரியம் சரியாய் முடியவில்லை; இனி எந்த விதம் முடியுமோ? என்ன நடக்குமோ? ஆண்டவனுக்குத் தான் தெரியும்; போர் மூண்டால் யாவரும் மாண்டு மடிய நேர்வரே! வருந்துகிறேன்'என்று இவ்வாறு கூறிக் கொண்டே தன்விரலணியைக் கழற்றி நயமாய்க் கீழே கழுவ விட்டான்: தரையில் விழுந்த மோதிரத்தை அசுவத் தாமன் எடுத்துக் கண்ணன் கையில் கொடுத்தான்: அதனை உடனே வாங்காமல் வானத்தைநோக்கிப் "பரிதி யைப் பரிவேடம் சூழ்ந்திருக்கிறதே ' என்று சூழ்ச்சி யோடு சொன்னன்; அவனும் பார்த்தான்; அதன்பின்